search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கே திண்ணை நாடகம் - டெல்லியில் தெருக்கூத்து:  மு.க.ஸ்டாலின் மீது தமிழிசை பாய்ச்சல்
    X

    இங்கே திண்ணை நாடகம் - டெல்லியில் தெருக்கூத்து: மு.க.ஸ்டாலின் மீது தமிழிசை பாய்ச்சல்

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திப்பு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.
    சென்னை:

    தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கேரள முதல் மந்திரி பினராயி விஜயனை சந்தித்து மத்தியில் 3வது அணி அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இதையடுத்து  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 4 மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில்  சந்திக்க உள்ளார்.



    இந்நிலையில் இந்த சந்திப்பு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

    “திமுக பொருளாளர் துரைமுருகன் ஆலோசனைப்படி மு.க.ஸ்டாலின் 25 ஆண்டுக்கு பின்னர் ஜனாதிபதியாக முதல் கலந்தாய்வு?

    தேர்தல் முடிவுகளுக்கு பின் டெல்லி குதிரைப்பந்தயத்தில் பங்கேற்க அழைப்பு? இங்கே திண்ணை நாடகம்; அடுத்து டெல்லியில் கட்சி / அணி மாறிகளின் தெருக்கூத்து?”

    இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திப்பு குறித்து அவர் விமர்சனம் செய்துள்ளார்.



    Next Story
    ×