search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பானி புயல் எதிரொலி - எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து
    X

    பானி புயல் எதிரொலி - எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து

    பானி புயல் எதிரொலியாக கீழ்க்கண்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. #CycloneFani #ExpressTrainCancel #SouthernRailway
    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    பானி புயல் எதிரொலியாக கீழ்க்கண்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்துசெய்யப்படுகின்றன.

    * ஹவுரா-யஸ்வந்த்பூர்(12863) எக்ஸ்பிரஸ் ரெயில், ஹவுரா-சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்(12839) எக்ஸ்பிரஸ் ரெயில், பாட்னா-எர்ணாகுளம்(22644) வாரம் இருமுறை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில், யஸ்வந்த்பூர்-ஹவுரா(12246) எக்ஸ்பிரஸ் ரெயில், பெங்களூரு கண்டோன்மென்ட்-அகர்தலா ஹம்சாபர்(12503) எக்ஸ்பிரஸ் ரெயில், சந்திரகாச்சி-சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்(02841) எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று(வெள்ளிக்கிழமை) முழுவதுமாக ரத்துசெய்யப்படுகிறது.

    * சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்-சந்திரகாச்சி(02842) சிறப்பு கட்டண சிறப்பு ரெயில், மங்களூரு-சந்திரகாச்சி(22852) விவேக் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில், விழுப்புரம்-புருளியா(22606) வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை(சனிக்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    * கொச்சுவேளி-கவுகாத்தி(82636) சுவிதா சிறப்பு ரெயில் வருகிற 5-ந்தேதியும், திருவனந்தபுரம்-சில்ஷார்(12507) வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 7-ந்தேதியும் முழுவதுமாக ரத்துசெய்யப்படுகிறது.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×