search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    1,500 ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்தது ஏன்? - பள்ளிக்கல்வி துறை விளக்கம்
    X

    1,500 ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்தது ஏன்? - பள்ளிக்கல்வி துறை விளக்கம்

    1,500 ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்தது ஏன்? என்பது குறித்து பள்ளிக்கல்வி துறை விளக்கம் அளித்து இருக்கிறது.#DepartmentofSchoolEducation
    சென்னை:

    அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணிபுரியும் 1,500 ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்தது தொடர்பாக பள்ளிக்கல்வி துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009-ன், பிரிவு 23(1)-படி மத்திய அரசின் அதிகாரம் பெற்ற கல்வி அமைப்பினால் நிர்ணயம் செய்யப்படும் குறைந்தபட்ச கல்வி தகுதிகளை பெற்றுள்ள நபர் மட்டுமே ஆசிரியராக நியமனம் செய்யப்பட தகுதி பெற்றவர்.

    அங்கீகாரம் பெற்ற கல்வி அமைப்பாக மத்திய அரசினால் நியமிக்கப்பட்ட தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் வரையறுத்துள்ள வழிமுறைகளின்படி மாநில அரசுகளால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களை மட்டுமே பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமனம் செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் 23.8.2010 அன்று அறிக்கை வெளியிட்டது.

    அதன் தொடர்ச்சியாக அரசு நிதி உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் 5 ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.



    ஆசிரியர் தகுதி தேர்வு நடத்திட ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. தமிழகத்தில் 12.7.2012, 14.10.2012 மற்றும் 17.8.2013 மற்றும் 18.8.2013 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டன.

    ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பல வழக்குகள் தொடர்ந்தனர். அதேபோல், துறை சார்பில் மேல்முறையீட்டு வழக்குகளும் தொடரப்பட்டன.

    இதனையடுத்து 24.2.2017-ல் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அறிவிக்கை வெளியிடப்பட்டு 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 மற்றும் 30-ந்தேதிகளில் மீண்டும் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது.

    இதற்கிடையில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009-க்கு மத்திய அரசு திருத்தம் வழங்கி, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற மேலும் 4 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கி மார்ச் 2019 வரை நீட்டிப்பு செய்து அறிவிப்பை வெளியிட்டது.

    எனினும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான கால அவகாசம் மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்க மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறையிடம் கேட்கப்பட்டது. இதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துவிட்டது.

    அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசத்துக்குள்ளும், நீதிமன்ற உத்தரவின் படியும் 4 முறை ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தி தமிழக அரசால் வாய்ப்பு வழங்கப்பட்டும் 1,500 ஆசிரியர்கள் இதுவரை தேர்ச்சி பெறவில்லை. எனவே அவர்களது சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டு இருக்கின்றது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #DepartmentofSchoolEducation

    Next Story
    ×