search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பானி புயல் எதிரொலி - எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து
    X

    பானி புயல் எதிரொலி - எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து

    பானி புயல் எதிரொலியாக கீழ்க்கண்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. #CycloneFani #ExpressTrainCancel #SouthernRailway
    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    பானி புயல் எதிரொலியாக கீழ்க்கண்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    * சென்னை எம்.ஜி.ஆர். மத்திய ரெயில் நிலையம்-சந்தரகாச்சி(வண்டி எண்:22808) எக்ஸ்பிரஸ் ரெயில், சென்னை எம்.ஜி.ஆர். மத்திய ரெயில் நிலையம்-ஹல்தியா(22613) எக்ஸ்பிரஸ் ரெயில், சென்னை எம்.ஜி.ஆர். மத்திய ரெயில் நிலையம்-ஷாலிமார்(22826) எக்ஸ்பிரஸ் ரெயில், சென்னை எம்.ஜி.ஆர். மத்திய ரெயில் நிலையம்-ஹவுரா மெயில்(12840) எக்ஸ்பிரஸ் ரெயில், ஹவுரா-சென்னை எம்.ஜி.ஆர். மத்திய ரெயில் நிலையம்(12841/12839) கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், சந்தரகாச்சி-சென்னை எம்.ஜி.ஆர். மத்திய ரெயில் நிலையம்(06057) எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று(வியாழக்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    * திருவனந்தபுரம்-ஷாலிமார்(22641), யஸ்வந்த்பூர்-ஹவுரா(12246/12864/22888), ஹவுரா-திருச்சி(12663), ஹவுரா-யஸ்வந்த்பூர்(12863), பாட்னா-எர்ணாகுளம்(22644) எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இன்று முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    * சென்னை எம்.ஜி.ஆர். மத்திய ரெயில் நிலையம்-ஹவுரா(12842), ஹவுரா-சென்னை எம்.ஜி.ஆர். மத்திய ரெயில் நிலையம்(12841) கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், சந்தரகாச்சி-சென்னை எம்.ஜி.ஆர். மத்திய ரெயில் நிலையம்(22807) எக்ஸ்பிரஸ் ரெயில், ஹவுரா-மைசூரு(22817) எக்ஸ்பிரஸ் ரெயில், காராக்பூர்-விழுப்புரம்(22603) எக்ஸ்பிரஸ் ரெயில், ஹவுரா-யஸ்வந்த்பூர்(12245) எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை(வெள்ளிக்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×