search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.ஏ.எஸ். அதிகாரி மனைவியிடம் ரூ.30 லட்சம் மோசடி- தொழில் அதிபர் மீது புகார்
    X

    ஐ.ஏ.எஸ். அதிகாரி மனைவியிடம் ரூ.30 லட்சம் மோசடி- தொழில் அதிபர் மீது புகார்

    ஏற்றுமதி நிறுவனம் நடத்துவதாக கூறி ஐ.ஏ.எஸ். அதிகாரி மனைவியிடம் ரூ.30 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக தொழில் அதிபர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    போரூர்:

    எல்காட் நிறுவனத்தில் மேலாண்மை அதிகாரியாக இருப்பவர் விஜயகுமார். ஐ.ஏ.எஸ். அதிகாரி.

    இவரது மனைவி லதா விஜயகுமார் விருகம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    நான் கணவர், குடும்பத்துடன் விருகம்பாக்கம் நடேசன் நகர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குடியிருப்பில் வசித்து வருகிறேன். கடந்த 2015-ம் ஆண்டு நானும் அமைந்தகரையை சேர்ந்த அப்பி அகமது என்பவரும் சேர்ந்து ‘மாஷா அல்லா’ என்ற பெயரில் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் ஒன்றை தொடங்கினோம்.

    இதில் எனது பங்காக 30 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை அப்பி அகமதுவிடம் நான் கொடுத்தேன். ஆனால் 4 மாதத்தில் எங்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டது.

    எனவே, அந்த நிறுவனத்தில் இருந்து நான் விலகிவிட்டேன். எனது பங்கு தொகையில் ரூ.7 லட்சத்தை மட்டும் அப்பி அகமது திருப்பிக் கொடுத்தார். மீதி தொகையை தராமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறார். எனவே, எனது பணத்தை அவர் திருப்பித்தர உரிய நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெறுகிறது.
    Next Story
    ×