search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் - சட்ட பேரவை செயலாளரிடம் திமுக மனு
    X

    சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் - சட்ட பேரவை செயலாளரிடம் திமுக மனு

    தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பிய நிலையில், அவர்மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர கோரி திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது. #DMK #SpeakerDhanapal #NoConfidenceMotion
    lசென்னை:

    அ.தி.மு.க.வில் உள்ள 114 எம்.எல்.ஏ.க்களில் விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகியோர் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம் செய்தனர்.

    அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்ட 3 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலை சந்தித்து புகார் மனு கொடுத்தார்.

    இதன் அடிப்படையில் 3 எம்.எல்.ஏ.க்களிடமும் விளக்கம் கேட்க சபாநாயகர் தனபால் முடிவு செய்தார். கொறடா ராஜேந்திரன் அளித்துள்ள புகார் குறித்து விளக்கம் கேட்டு தினகரன் ஆதரவு 3 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் தனபால் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 



    இந்நிலையில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சட்டப் பேரவை செயலாளர் சீனிவாசனிடம் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி மனு அளித்தார்.

    ஏற்கனவே, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் நோட்டீஸ் கொடுத்தால் அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. #DMK  #SpeakerDhanapal #NoConfidenceMotion
    Next Story
    ×