search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மே 23-ந்தேதி மதியத்திற்கு பிறகு தமிழகத்தில் எடப்பாடி ஆட்சி இருக்காது- முன்னாள் அமைச்சர்கள் பேட்டி
    X

    மே 23-ந்தேதி மதியத்திற்கு பிறகு தமிழகத்தில் எடப்பாடி ஆட்சி இருக்காது- முன்னாள் அமைச்சர்கள் பேட்டி

    மே 23-ந்தேதி மதியத்திற்கு பின்னர் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி இருக்காது என்று முன்னாள் அமைச்சர்கள் கூறியுள்ளனர். #edappadipalanisamy #ponmudi #senthilbalaji

    அரவக்குறிச்சி:

    அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.

    பின்னர் முன்னாள் அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், கோர்ட்டுக்கு சென்று முறையிட்டதன் காரணமாக தேர்தல் ஆணையம் தற்போது தேர்தலை நடத்துகிறது.

    22 தொகுதி இடைத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில் பாலாஜி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அது இங்கு வந்த மக்கள் கூட்டத்தை வைத்து பார்ப்பதன் மூலம் தெளிவாக தெரிகிறது. மே 23-ந்தேதிக்கு மறுநாள் தமிழகத்தில் ஆட்சி கவிழும். மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் செந்தில் பாலாஜி கூறியதாவது:-

    தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க.வின் வெற்றி உறுதியாகி விட்டது. நாங்கள் வெற்றிக்கோட்டை தொட்டுவிட்டோம். எங்களுக்கு பின்னால் ஓடி வருபவர்கள் ஓடுவார்களா, மாட்டார்களா? என்று எனக்கு தெரியாது.

    அரவக்குறிச்சி பகுதியில் ஒரே வீட்டில் இரண்டு, மூன்று குடும்பங்கள் வசிக்கும் சூழ்நிலை உள்ளது. நான் வெற்றி பெற்றால் 25 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா ரூ.3 சென்ட் நிலம் வழங்கப்படும். தி.மு.க. தேர்தல் வாக்குறுதிப்படி அவர்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்படும்.


    க.பரமத்தி, அரவக்குறிச்சி பகுதிகளில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நான் அமைச்சராக இருந்த போது கொண்டு வந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் ஆட்சியில் அந்த திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மே 23-ந்தேதி மதியத்திற்கு பின்னர் தமிழகத்தில் எடப்பாடி ஆட்சி இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார். #edappadipalanisamy #ponmudi #senthilbalaji

    Next Story
    ×