search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சூலூர் பகுதியில் தொடர் செயின் பறிப்பு - 4 வாலிபர்கள் கைது
    X

    சூலூர் பகுதியில் தொடர் செயின் பறிப்பு - 4 வாலிபர்கள் கைது

    சூலூர் பகுதியில் தொடர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூலூர்:

    சூலூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்து வந்தது. இதுகுறித்து கருமத்தம்பட்டி டி.எஸ்.பி. பாஸ்கரன் உத்தரவின் பேரில் சூலூர் இன்ஸ்பெக்டர் தங்கராஜ், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டிராஜ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து சூலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தினர்.

    சூலூர் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டிராஜ் மற்றும் போலீசார் சூலூர் அடுத்துள்ள காசிகவுண்டன் புதூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் 2 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது சூலூர் பகுதிகளில் சில மாதங்களாக நடந்த தொடர் சங்கிலி பறிப்பில் தொடர்புடையவர்கள் என தெரிந்தது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பாப்பம்பட்டி பகுதியில் பதுங்கி இருந்த மேலும் 2 பேரை போலீசார் பிடித்தனர்.  விசாரணையில் அவர்கள் பள்ளபாளையம் பகுதியில் வசித்து வரும் ஆகாஷ் (19), சூலூர் மதியழகன் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் கணேஷ் மணி (27 ), பாலமுருகன் (22), காளையார்கோவில் பகுதியை சேர்ந்த காளீஸ்வரன் (24)என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.

    மேலும் அவர்கள் பதுக்கி வைத்திருந்த சுமார் 19 பவுன் தங்க நகைகளையும் மீட்டனர். இதை தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் சூலூர் கோர்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×