search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டாலின் நிச்சயமாக ஆட்சிக்கு வரவே முடியாது - தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு
    X

    ஸ்டாலின் நிச்சயமாக ஆட்சிக்கு வரவே முடியாது - தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு

    திமுக தலைவர் முக ஸ்டாலின் நிச்சயமாக ஆட்சிக்கு வரவே முடியாது என தேர்தல் பிரசார கூட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். #TamilisaiSoundararajan
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதி முத்தரையர் காலனி பகுதியில் தூத்துக்குடி பா.ஜ.க. பாராளுமன்ற வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் அந்த பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் சாமி தரிசனத்திற்கு பிறகு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    தூத்துக்குடியில் தாமரை வெற்றிபெற்றே ஆக வேண்டும். தூத்துக்குடிக்கு வந்த ஸ்டாலின் பாரதிய ஜனதா கட்சி தோல்வி அடையவே இங்கு போட்டியிடுகின்றனர் என்கின்றார். அதைபார்த்து இன்னொருவர் சிரிக்கின்றார். தேர்தல் தேதி முடிவு வரும்போது யார் சிரிக்கிறார்கள், யார் அழுகின்றனர் என்று தூத்துக்குடி மக்கள் பார்க்கதான் போகின்றார்கள்.

    தாமரை- இரட்டை இலையோடு சேர்ந்து சிரிக்கதான் போகின்றது. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆட்சிக்கு வருவதற்கு அவசரம் காட்டுகின்றார். ஆனால் அவர் ஆட்சிக்கு வரவே முடியாது. அவர் முதலிலையே எழுதி வைத்துகொள்ளலாம். மேலும் தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்பட்டபோது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், பிரதமர் மோடியும் சேர்ந்து அவர்களை விடுவிக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் தேர்தல் அறிக்கையில் ஆழ் கடல் மீன்பிடிப்பதற்கு மானியம் மட்டும் 40 லட்சம் வழங்கப்படும், குளிர்சாதன வசதிகள் படகில் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன்.

    தேர்தல் கமிசன் அனுமதியோடு தான் எம்.ஜி.ஆர். பெயரை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வைத்துள்ளோம் என்று ஸ்டாலின் புரிந்துகொள்ள வேண்டும். காமராஜர், எம்.ஜி.ஆர். மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு பெருமை சேர்ப்பது இந்த கூட்டணி. உலகத்திலையே மிக பிரபலமான ஊழலை செய்து திகார் சிறையில் ஒரு ஆண்டுகள் இருந்தவர்கள் இதெல்லாம் தூத்துக்குடி மக்களுக்கு தெரியாது என்று வாக்கு கேட்கிறார்கள். என் மீது எந்த வழக்கும் கிடையாது. எனவே தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TamilisaiSoundararajan
    Next Story
    ×