search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆரணி, போளூரில் பறக்கும்படை சோதனையில் ரூ.2.85 லட்சம் பறிமுதல்
    X

    ஆரணி, போளூரில் பறக்கும்படை சோதனையில் ரூ.2.85 லட்சம் பறிமுதல்

    ஆரணி மற்றும் போளூரில் பறக்கும்படை சோதனையில் ரூ.2.85 லட்சம் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ஆரணி:

    பாராளுமன்ற, சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை கொண்டு செல்வதை தடுக்க தேர்தல் பறக்கும் படை, நிலைகண்காணிப்பு குழுக்கள் அமைத்து தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை புளியந்தோப்பை சேர்ந்த ரிஸ்வான் (25) மாட்டு வியாபாரி.

    இவர் ஆரணி அடுத்த தேப்பனந்தலில் இன்று நடைபெறும் மாட்டு சந்தையில் மாடுகளை வாங்க தனது காரில் சென்று கொண்டிருந்தார்.

    ஆரணி அடுத்த மலையம்பட்டு கூட்டு ரோட்டில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். பறக்கும் படை அலுவலர் பாபு தலைமையிலான குழுவினர் ரிஸ்வான் காரை சோதனை செய்த போது ரூ 1.95 லட்சம் இருந்தது. ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து ஆரணி தாசில்தார் தியாகராஜனிடம் பணத்தை ஒப்படைத்தனர்.

    போளூர் அடுத்த வசூர் கூட்ரோட்டில் பறக்கும் படை தாசில்தார் சுரேஷ் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செங்கம் அடுத்த காரப்பட்டில் ரைஸ் மில் நடத்தி வரும் சிலம்பரசன் என்பவர் ஓட்டி வந்த மினிலாரியை மடக்கி சோதனை செய்தனர்.

    அப்போது அவரிடம் ரூ.90 ஆயிரம் இருந்தது இந்த பணத்தை வைத்து படவேட்டில் நெல் வாங்க செல்வதாக கூறினார். அதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லாததால் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்தனர். பறக்கும் படையினர் பிடித்த ரூ.90 ஆயிரத்தை தேர்தல் பிரிவு அலுவலரிடம் ஒப்படைத்தனர். #tamilnews
    Next Story
    ×