search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி -தஞ்சை பயணிகள் ரெயில் 15-ந் தேதி வரை ரத்து
    X

    திருச்சி -தஞ்சை பயணிகள் ரெயில் 15-ந் தேதி வரை ரத்து

    திருச்சி ரெயில்வே கோட்டத்தில் பொறியியல் பணிகள் நடந்து வருகிறது. இதன் காரணமாக திருச்சி - தஞ்சை- திருச்சிக்கு இயக்கப்படும் பயணிகள் ரெயில் (76820- 76823) வருகிற 15-ந்தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
    தஞ்சாவூர்:

    இதேபோல் திருச்சி -தஞ்சை-திருச்சிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் (76824-76827)வரும் 6-ந்தேதி, 13, 20 மற்றும் 21 ஆகிய 4 நாட்கள் முழு அளவில் ரத்து செய்யப்படுகிறது. திருநெல்வேலி- மயிலாடுதுறை- திருநெல்வேலி பயணிகள் ரெயில் (56822- 56821) மயிலாடுதுறை-திருச்சி- மயிலாடுதுறை இடையே பகுதி தூரம் வரும் 30-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

    காரைக்குடி- பட்டுக்கோட்டை -காரைக்குடி டெமு பயணிகள் ரெயில் (06856-06855) 15-ந்தேதி வரை சேவை கிடையாது. இந்த தகவல்களை திருச்சி ரயில்வே கோட்ட நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×