search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் கடத்தல்? - போலீசார் விசாரணை
    X

    திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் கடத்தல்? - போலீசார் விசாரணை

    புதுவையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் கடத்தப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    சேதராப்பட்டு அருகே துத்திப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகள் வளர்மதி (வயது22). கல்லூரி படிப்பை முடித்த இவருக்கும் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற இவரது உறவினர் மகனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த மாதம் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதற்கிடையே திருமணம் முடிந்த பிறகு பிரான்சுக்கு செல்ல வசதியாக வளர்மதி உருளையன்பேட்டை முத்தமிழ் நகரில் உள்ள தனது சித்தப்பா மூர்த்தி வீட்டில் தங்கி பிரெஞ்சு வகுப்புக்கு சென்று வந்தார். கடந்த 29-ந்தேதி காலை மூர்த்தியின் குடும்பத்தினர் தேவாலயத்துக்கு பிரார்த்தனை செய்ய சென்றனர். வீட்டில் வளர்மதி மட்டும் இருந்தார்.

    பின்னர் பிரார்த்தனை முடிந்து மூர்த்தியின் குடும்பத்தினர் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டில் இருந்த வளர்மதியை காணாமல் திடுக்கிட்டனர். அவரது பெற்றோர் வீட்டில் விசாரித்த போது அங்கும் வளர்மதி செல்லவில்லை என்பது தெரியவந்தது. உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் எங்கும் வளர்மதி இல்லை. இதையடுத்து மூர்த்தி உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் வளர்மதிக்கும், துத்திப்பட்டை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் காதல் இருந்து வந்தது தெரியவந்தது. இதனால் வளர்மதியை அவரது காதலர் கடத்தி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    Next Story
    ×