search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வில்லியனூரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற கார் டிரைவர் கைது
    X

    வில்லியனூரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற கார் டிரைவர் கைது

    வில்லியனூரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
    புதுச்சேரி:

    வில்லியனூர் சப்-இன்ஸ் பெக்டர்கள் குமார், நந்தகுமார் மற்றும் போலீஸ் காரர்கள் ஞானசேகர், அய்யனார் ஆகியோர் வில்லியனூர் கூடப்பாக்கம் ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது பட்டாணிகளம் ரெயில்வே கேட் பகுதியில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். போலீசாரை பார்த்ததும் அந்த வாலிபர் தப்பி ஓட முயன்றார். உடனே போலீசார் விரட்டி சென்று அவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்றது தெரியவந்தது.

    அவரது சொந்த ஊர் வில்லியனூரை அடுத்த கணுவாப்பேட்டையை சேர்ந்த ரவி (வயது 38) என்பதும், இவர் கார் டிரைவராக இருப்பதும் தெரியவந்தது. ரவியை போலீசார் கைது செய்தனர். 

    அவரிடம் இருந்து ரொக்க பணம் ரூ.24 ஆயிரத்து 140 மற்றும் செல்போன், லாட்டரி சீட்டுகளை பறி முதல் செய்தனர். இவரிடம்  போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் விழுப்புரத்தை அடுத்த பள்ளித்தென்னல் பகுதியை சேர்ந்த கார்த்தீபன் என்பவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை வாங்கி விற்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் கார்த்தீபனை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×