search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    படுக்கப்பத்து வங்கியில் தீ விபத்து- ரூ.5 கோடி மதிப்பிலான நகைகள்-பணம் தப்பியது
    X

    படுக்கப்பத்து வங்கியில் தீ விபத்து- ரூ.5 கோடி மதிப்பிலான நகைகள்-பணம் தப்பியது

    சாத்தான்குளம் அருகே படுக்கப்பத்து வங்கியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ. 5 கோடி மதிப்பிலான பணம்- தங்க நகைகள் இருக்கும் அறை தீப்பிடிக்காமல் தப்பின.
    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே படுக்கப்பத்து ரமேஷ் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் தேசியமயமாக்கப் பட்ட வங்கியின் கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. படுக்கப்பத்து, எள்ளுவிளை, பெரியதாழை, சுண்டங்கோட்டை உள்ளிட்ட பல ஊர்களில் உள்ள பொதுமக்கள் இந்த வங்கியில் வாடிக்கையாளர்களாக உள்ளனர். 

    கடந்த  22-ந்தேதியன்று பணிகள் முடித்து விட்டு பணியாளர்கள் வங்கி கதவை மூடி விட்டு சென்று விட்டனர். இந்நிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் வங்கி கட்டிடத்தின் உள்ளே இருந்து குபு குபுவென புகை வந்தது. இது குறித்து ரமேசுக்கு தகவல் தெரிவித்தனர். 

    சாத்தான்குளம் தீயணைப்பு படையினர் மற்றும் தட்டார்மடம் காவல் துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. உடனே சாத்தான் குளம் தீயணைப்பு படை நிலைய அலுவலர் பத்மசேகர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தினால் மேலாளர் அறையில் இருந்த 2 ஏ.சி. மிஷின்கள், 5 கம்ப்யூட்டர்கள் மற்றும் மேஜை உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமானது. சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளதாக தெரிகிறது. தீயணைப்பு படையினர் போராடி தீயை வேக வேகமாக செயல்பட்டு தீயை அணைத்ததினால் வங்கியில் இருந்த பணம்- தங்க நகைகள் இருக்கும் அறை தீப்பிடிக்காமல் தடுக்கப்பட்டது.

    இதனால் சுமார் ரூ.5 கோடி பணம் மற்றும் தங்க நகைகள் தப்பின என்று வங்கி பணியாளர்கள் தெரிவித்தனர். இது குறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×