search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொள்ளாச்சி சம்பவம்- நக்கீரன் கோபால், சபரீசன் மீதான 5 வழக்குகளும் சி.பி.ஐ.க்கு மாற்றம்
    X

    பொள்ளாச்சி சம்பவம்- நக்கீரன் கோபால், சபரீசன் மீதான 5 வழக்குகளும் சி.பி.ஐ.க்கு மாற்றம்

    பொள்ளாச்சி சம்பவம் விஸ்வரூபம் எடுத்ததையடுத்து நக்கீரன் கோபால், சபரீசன் மீதான 5 வழக்குகளும் சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. #pollachiissue #cbi

    கோவை:

    பொள்ளாச்சி பாலியல் வழக்கு விஸ்வரூபம் எடுத்ததையடுத்து சி.பி.சி. ஐ.டி.க்கு மாற்றி தமிழக அரசு உத்தர விட்டது.

    அடுத்த சில மணி நேரத்தில் இவ்வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ. விசாரணை தொடங்கும் வரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே பொள்ளாச்சி வழக்கு தொடர்பான வீடியோ வெளியிட்டதாக நக்கீரன் கோபால் மீது சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அதேபோல தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன், பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக தன் குடும்ப உறுப்பினர்கள் மீது அவதூறு பரப்புவதாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கொடுத்த புகாரின்பேரில் சபரீசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதவிர மேலும் 3 வழக்குகளை சிலர் மீது பதிவு செய்துள்ளனர்.

    இந்த வழக்கில் முன் ஜாமீன் அளிக்கக்கோரி நக்கீரன் கோபால் தாக்கல் செய்த மனு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் ஆஜரானார்.

    அவர் ‘பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக நக்கீரன் கோபால், சபரீசன் உள்பட பலர் மீது பதிவு செய்யப்பட்ட 5 வழக்குகளையும் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது’ என்றார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே மனுதாரர் தேவைப்படும் போது முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தை அணுகலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

    பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி கொடுத்த புகாரின்பேரில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதிஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேரை பொள்ளாச்சி கிழக்கு போலீசார் கைது செய்தனர்.


    பாதிக்கப்பட்ட மாணவியின் அண்ணனை தாக்கியதாக பார்நாகராஜ், செந்தில், பாபு, வசந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் மணிவண்ணன் என்பவர் தலைமறைவாக உள்ளார். இந்த இரண்டு வழக்குகளையும் சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு கடந்த வாரம் அரசாணை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பான மேலும் 5 வழக்குகளும் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #pollachiissue #cbi

    Next Story
    ×