search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாபநாசம் அணை நீர்மட்டம் 38 அடியாக குறைந்தது
    X

    பாபநாசம் அணை நீர்மட்டம் 38 அடியாக குறைந்தது

    144 அடி உச்ச நீர்மட்டம் உள்ள பாபநாசம் அணையில் இன்று மிகவும் குறைந்த அளவான 38 அடியே இருந்தது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரதான பெரிய அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு மூலம் தான் பெருவாரியான விவசாயம் மற்றும் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வந்தன.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக பாபநாசம், சேர்வலாறு அணையில் இருந்து தண்ணீர் அதிகப்படியாக திறக்கப்பட்டது. இதனால் நீர்மட்டம் வேகமாக குறையத்தொடங்கியது. 144 அடி உச்ச நீர்மட்டம் உள்ள பாபநாசம் அணையில் இன்று மிகவும் குறைந்த அளவான 38 அடியே இருந்தது.

    இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 212.25 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 50.82 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 83.05 அடியாக உள்ளது. அங்கு 70 சதவீத நீர் இருப்பு உள்ளதால் அதன் மூலம் இந்த கோடை காலத்தை சமாளித்து விடலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    கடந்த ஆண்டு சேர்வலாறு அணை பழுது பார்க்கும் பணி நடந்ததால் பாபநாசம் அணையில் நீர் திறக்கப்பட்டு வற்ற வைக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டும் பாபநாசம் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.



    Next Story
    ×