search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம்
    X

    பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம்

    பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கோவையில் நேற்று விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
    கோவை:

    தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கோவை டவுன்ஹாலில் நேற்று வாகன பிரசாரம் தொடங்கப்பட்டது.

    இதனை மாநகராட்சி துணை ஆணையாளர் பிரசன்னா ராமசாமி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் பங்கேற்ற பெண்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் பிடித்தபடி பங்கேற்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மத்திய மண்டல உதவி ஆணையாளர் செந்தில் அரசன், தனித்துணை தாசில்தார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவை மாநகராட்சி சார்பில் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர்கள் இடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வாகன பிரசாரம் தொடங்கப்பட்டு உள்ளது.

    இதில் 2 வாகனங்களில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் வாசகங்கள் எழுதப்பட்டு இருக்கும். இந்த வாகனங்கள் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டு பிரசாரம் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×