search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை பாமக பிரமுகர் தம்பி கொலை- முக்கிய குற்றவாளி நிலக்கோட்டை கோர்ட்டில் சரண்
    X

    மதுரை பாமக பிரமுகர் தம்பி கொலை- முக்கிய குற்றவாளி நிலக்கோட்டை கோர்ட்டில் சரண்

    மதுரை பா.ம.க. பிரமுகர் தம்பி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த வாலிபர் நிலக்கோட்டை கோர்ட்டில் சரண் அடைந்தார்.

    வத்தலக்குண்டு:

    மதுரை அவனியாபுரத்தில் பா.ம.க. மாநில இளைஞரணி செயலாளர் இளஞ்செழியன் தம்பி மாரி (வயது38). முன்விரோதம் காரணமாக கடந்த 6-ந் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்தனர்.

    கடந்த 13-ந் தேதி பாலமேடு அருகே சரந்தாங்கி மலைப்பகுதியில் இக்கொலையில் தொடர்புடையவர்களை தேடி வந்தனர். அங்கு பதுங்கி இருந்த 5 பேர் பயங்கர ஆயுதங்களுடன் போலீசாரை தாக்க முயன்றனர்.

    அப்போது பாலமேட்டை சேர்ந்த ரஞ்சித்குமார் (24), நரிக்குடியை சேர்ந்த கார்த்திக் (28), சிலைமான் விணுசக்கரவர்த்தி ஆகியோரை கைது செய்தனர். தப்பி ஓடிய வெள்ளையம்பட்டியை சேர்ந்த அஜித், ராமுவை தேடி வந்தனர்.

    இதனிடையே இக்கொலையில் முதல் குற்றவாளியான மதுரையை சேர்ந்த முத்துச்செல்வன் (27) நிலக்கோட்டை கோர்ட்டில் சரண் அடைந்தார். நீதிபதி பர்வீன் ரிஸ்வானா அவரை மதுரை சிறையில் 15 நாள் காவலில் அடைக்க உத்தரவிட்டார்.

    சரண் அடைந்த முத்துச் செல்வன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. விருதுநகர் பாதிரியார் கொலை, சிலைமான் இரட்டை கொலை உள்ளிட்ட 5 கொலை வழக்குகளில் தொடர்புடையவர். இவர் கடந்த 11-ந் தேதி கரூர் கோர்ட்டில் சரண் அடைய வந்தார். அங்கு போதிய அடையாள அட்டை ஆவணங்கள் இல்லாததால் சரண் அடைய வந்த முத்துச் செல்வனை போலீசார் கைது செய்ய முயன்றனர். ஆனால் முத்துச்செல்வன் போலீசாரை தாக்கி விட்டு கோர்ட்டில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.

    Next Story
    ×