search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகை பாராளுமன்ற தொகுதியில் 12 லட்சத்து 92 ஆயிரம் வாக்காளர்கள்- கலெக்டர் தகவல்
    X

    நாகை பாராளுமன்ற தொகுதியில் 12 லட்சத்து 92 ஆயிரம் வாக்காளர்கள்- கலெக்டர் தகவல்

    நாகை பாராளுமன்ற தொகுதியில் 12 லட்சத்து 92 ஆயிரத்து 658 வாக்காளர்கள் உள்ளதாக கலெக்டர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார். #LSPolls
    நாகப்பட்டினம்:

    நாகை பாராளுமன்ற தொகுதியில் 12 லட்சத்து 92 ஆயிரத்து 658 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர்.

    நாகை பாராளுமன்ற தொகுதி 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடங்கியது. இதில் நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம், வேதாரண்யம், கீழ்வேளூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளும், திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளும் உள்ளடக்கியது.

    இதில் கடந்த ஜனவரி 31-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த இறுதி வாக்காளர் பட்டியலின்படி 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் விவரம் வருமாறு:-

    நாகை சட்டமன்ற தொகுதியில் 91 ஆயிரத்து 422 ஆண் வாக்காளர்களும், 96 ஆயிரத்து 390 பெண் வாக்காளர்களும், 5 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 1 லட்சத்து 87 ஆயிரத்து 817 வாக்காளர்கள் உள்ளனர்.

    கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியில் 82 ஆயிரத்து 966 ஆண் வாக்காளர்களும், 85 ஆயிரத்து 710 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 2 பேர் என மொத்தம் 1 லட்சத்து 68 ஆயிரத்து 678 வாக்காளர்கள் உள்ளனர். வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் 90 ஆயிரத்து 228 ஆண் வாக்காளர்களும், 92 ஆயிரத்து 731 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 1 லட்சத்து 82 ஆயிரத்து 959 வாக்காளர்கள் உள்ளனர்.

    திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 716 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 35 ஆயிரத்து 421 பெண் வாக்காளர்களும், 22 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 66 ஆயிரத்து 159 வாக்காளர்கள் உள்ளனர். நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 379 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 27 ஆயிரத்து 991 பெண் வாக்காளர்களும், 7 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 58 ஆயிரத்து 377 வாக்காளர்கள் உள்ளனர்.

    திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 15 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 15 ஆயிரத்து 652 பெண் வாக்காளர்களும், 1 மூன்றாம் பாலின வாக்காளர் என மொத்தம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 668 வாக்காளர்கள் உள்ளனர்.

    நாகை பாராளுமன்றத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 6 லட்சத்து 38 ஆயிரத்து 726 ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து 53 ஆயிரத்து 895 பெண் வாக்காளர்களும், 37 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 12 லட்சத்து 92 ஆயிரத்து 658 வாக்காளர்கள் உள்ளனர்.

    இதில் ஆண்களை விட 15 ஆயிரத்து 169 பெண்கள் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.

    இத்தகவலை நாகை மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார். #LSPolls
    Next Story
    ×