search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை கட்டுப்படுத்துவது எப்படி? - மாணவியின் கேள்விக்கு ராகுல் பதில்
    X

    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை கட்டுப்படுத்துவது எப்படி? - மாணவியின் கேள்விக்கு ராகுல் பதில்

    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக சென்னை மாணவி எழுப்பிய கேள்விக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெளிவாக பதில் அளித்தார். #Congress #RahulGandhi
    சென்னை:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது கல்வி, அரசியல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக மாணவிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து அவர் பேசியதாவது:-

    நாட்டில் தற்போதுள்ள உயர்கல்வி திட்டம் சிறந்த தரத்திலேயே உள்ளது. கல்வி மற்றும் ஆராய்ச்சி திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படவேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு ஊழல் தடையாக உள்ளது.

    காஷ்மீர் மீதான பார்வை மாறவேண்டும். ஜம்மு காஷ்மீரில் மக்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலமே பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த முடியும். காஷ்மீர் இளைஞர்களை மற்ற இளைஞர்களோடு இணையச் செய்வதன் மூலம் பயங்கரவாதத்தை குறைக்க முடியும்.

    காங்கிரஸ் ஆட்சியில் பாகிஸ்தான் நாட்டை தனிமைப்படுத்த ராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியின்போது, காஷ்மீரில் 2011 முதல் 2013 வரை உயிரிழப்பு பெருமளவு குறைக்கப்பட்டது. தொடர் நடவடிக்கைகள் மூலம் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை காங்கிரஸ் அரசு தடுத்து வந்தது.


    நாட்டில் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. பத்திரிகையாளர்களும் தங்கள் கடமையை உணர்ந்து செயலாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கலந்துரையாடல் தொடங்கியபோது, ஒரு மாணவி சார் என்று அழைத்தபோது, அவ்வாறு அழைக்க வேண்டாம், ராகுல் என்றே அழைக்கவும் என ராகுல்காந்தி மாணவிகளிடம் கூறினார். பின்னர், ஹாய் ராகுல் என ஒரு கல்லூரி மாணவி கூறியதும் அரங்கத்தில் சிரிப்பலை எழுந்தது. கலந்துரையாடல் முடியும் தருவாயிலும் மாணவிகள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அப்போது அனைவரும் சமூக வலைத்தளங்களில் தன்னை பின்தொடரும்படி ராகுல் கேட்டுக்கொண்டார்.  #Congress #RahulGandhi
    Next Story
    ×