search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் மோசடி - பட்டதாரிகள் போலீசில் புகார்
    X

    வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் மோசடி - பட்டதாரிகள் போலீசில் புகார்

    கோவையில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக என்ஜினீயர்கள், பட்டதாரிகள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
    கோவை:

    கோவையை சேர்ந்த என்ஜினீயர்கள், பட்டதாரிகள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் இன்று மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து ஒரு புகார் மனு அளித்தனர்.அதில் கூறியிருப்பதாவது:-

    கோவையில் தனியார் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று எங்களுக்கு கனடா, நியூசிலாந்து நாடுகளில் உள்ள நிறுவனங்களில் வேலை நல்ல சம்பளத்துடன் வேலை வாங்கி தருவதாக கூறியது.

    இதை நம்பி நாங்கள் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை கொடுத்தோம். ஆனால் நிறுவனத்தினர் கூறியபடி வேலை வாங்கி தரவில்லை. இதுகுறித்து நாங்கள் கேட்ட போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிறுவனத்தை மூடி விட்டு நிர்வாகிகள் தலைமறைவாகி விட்டனர். எங்களது பாஸ் போர்ட்டும் அந்த நிறுவனத்தினரிடம் தான் உள்ளது.

    எனவே எங்களை ஏமாற்றிய நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுத்து எங்களது பணம் மற்றும் பாஸ்போர்ட்டு ஆகியவற்றை மீட்டுத் தர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    புகார் கொடுத்தவர்கள் கூறுகையில், கோவை மட்டு மல்லாது பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் லட்சக்கணக்கில் இந்நிறுவனத்தில் பணம் கொடுத்து ஏமாந்துள்ளதாக தெரிவித்தனர். #tamilnews
    Next Story
    ×