search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் வெயிலுக்கு 2 பேர் பலி
    X

    நெல்லை மாவட்டத்தில் வெயிலுக்கு 2 பேர் பலி

    நெல்லை மாவட்டத்தில் நேற்று வெயிலுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர்.

    நெல்லை:

    தமிழகத்தில் தற்போது கோடை வெயில் கொளுத்த தொடங்கியுள்ளது. நெல்லை, பாளை பகுதியில் அதிகபட்சமாக 103 டிகிரி வரை வெயில் கொளுத்தி வருகிறது. சாலைகளில் அனல் காற்று வீசுகிறது. நெடுஞ்சாலைகளில் கானல் நீரும் தென்படுகிறது.

    பாளை ரஹ்மத் நகர் அருகே ஒரு தனியார் கல்லூரியில் புதிய கட்டிடங்கள் கட்டும்பணி நடந்து வருகிறது. இந்த பகுதியில் நேற்று 40 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து பாளை போலீசில் புகார் செய்யப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அவரது பெயர் விபரம் தெரியவில்லை. சுமார் 40 வயதுள்ள அவர் வெயில் கொடுமை தாங்காமல் மயங்கி விழுந்து இறந்தது தெரியவந்தது.

    இது தொடர்பாக பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியானவர் யார்? எந்த ஊர்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுபோல செங்கோட்டை பிரானூர் பார்டர் பகுதியில் கடந்த சில நாட்களாக வெளிமாநிலத்தை சேர்ந்த 55 வயதான ஒருவர் மனநிலை பாதிக்கப்பட்டு சாலையில் திரிந்து கொண்டிருந்தார். தற்போது வெயில் அதிகமாக அடித்ததால் நேற்று முன்தினம் அவர் மயங்கி விழுந்தார்.

    உடனடியாக அவரை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று அவர் பரிதாபமாக மரணமடைந்தார். இதனால் நெல்லை மாவட்டத்தில் கடும் வெயிலுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர்.

    வெயில் கொடுமையில் இருந்து மீள தற்போது சாலை யோரங்களில் ஏராளமான குளிர்பான கடைகளும், பழ ஜூஸ் கடைகளும் வந்துள்ளன. தர்ப்பூசணி பழங்களும் ஏராளமாக சாலையோரம் குவிக்கப்பட்டுள்ளது. பகலில் வெளியே செல்லும் பயணிகள் தற்போது தர்ப்பூசணி, இளநீர் போன்றவற்றை அதிகம் வாங்கி சாப்பிட்டு வருகிறார்கள்.

    Next Story
    ×