search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நத்தம் பகுதியில் கொளுத்தும் வெயில்- மக்கள் நடமாட அச்சம்
    X

    நத்தம் பகுதியில் கொளுத்தும் வெயில்- மக்கள் நடமாட அச்சம்

    நத்தம் பகுதியில் வெயின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் குடை பிடித்துக் கொண்டும், தலையில் துணியால் முக்காடு போட்டுக் கொண்டும் மரத்தடியை நாடிச் செல்கின்றனர்.
    நத்தம்:

    ஆண்டு தோறும் ஏப்ரல் மாதத்தில் கோடை கால வெயில் தொடங்குவது வழக்கம், ஆனால் இந்த வருடம் மார்ச் மாத தொடக்கத்திலேயே கடுமையான வெப்பமும், வெயிலும் காணப்படுகிறது. இதனால் தார்ச்சாலைகளில் கானல் நீருடன் அனல் பறக்கிறது. 

    சிறுவர் முதல் வயோதிகர் வரை கால்களில் காலணியுடன் நடக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தப்பித்தவறி எவரேனும் காலணி இல்லாமல் நடக்க முற்பட்டால் அவர்கள் ஓடிச் சென்று நிழலை தேடிச் செல்வதை பார்க்க முடிகிறது. இது தவிர நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள்.

     அதைப்போல நத்தம் வட்டாரத்தில் கிராம புறங்களிலும், நகர் பகுதிகளிலும் வெயின் தாக்கம் அதிகரித்துள்ளது. ஆங்காங்கே மக்கள் குடை பிடித்துக் கொண்டும், தலையில் துணியால் முக்காடு போட்டுக் கொண்டும் மரத்தடியை நாடிச் செல்கின்றனர். சமீப காலமாக மழை பெய்யாமல் வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளது.

    இந்நிலை நீடித்து வந்தால் குடிநீர் தட்டுப்பாடு வருங்காலங்களில் ஏற்பட வாய்ப்பாக அமையும். என்று இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×