search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பட்டா மாறுதலுக்காக ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான கிராம நிர்வாக அலுவலர் சிறையில் அடைப்பு
    X

    பட்டா மாறுதலுக்காக ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான கிராம நிர்வாக அலுவலர் சிறையில் அடைப்பு

    பட்டா மாறுதலுக்காக ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான கிராம நிர்வாக அலுவலர் சிறையில் அடைக்கப்பட்டார்.
    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே உள்ள காட்டூர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் சுரேஷ்குமார் (45). இவரது அலுவலகம் கொங்க நாயக்கன் பாளையத்தில் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு சென்ற நாயக்கன் பாளையத்தை சேர்ந்த விவசாயி பிரகதீஸ்வரன் (29) சென்று தனது நிலத்திற்கான பட்டா மாறுதல் செய்து தர வேண்டும் என விண்ணப்பம் அளித்தார்.

    இதற்கு கிராம நிர்வாக அலுவலர் ரூ. 3 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என கேட்டுள்ளார். இதற்கு பிரகதீஸ்வரன் சம்மதிக்கவில்லை. ரூ. ஆயிரம் மட்டும் தருவதாக கூறி உள்ளார்.

    அதனை கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் குமார் ஏற்றுக் கொள்ளவில்லை. கண்டிப்பாக ரூ. 3 ஆயிரம் கொடுத்தால் தான் பட்டா மாறுதல் செய்து தரப்படும் என தெரிவித்து உள்ளார்.

    இது குறித்து விவசாயி பிரகதீஸ்வரன் திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூ. 2 ஆயிரம் நோட்டு ஒன்றும், இரு 500 ரூபாய் நோட்டுக்களையும் பிரகதீஸ்வரனிடம் கொடுத்து அனுப்பி உள்ளனர்.

    இதனை கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ்குமாரிடம் பிரகதீஸ்வரன் கொடுத்த போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ. 3 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். சுமார் 3 மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது. பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×