search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேமுதிக நிர்வாகிகள் தங்களை காப்பாற்றிக்கொள்ள மாற்றி பேசுகின்றனர்- துரைமுருகன்
    X

    தேமுதிக நிர்வாகிகள் தங்களை காப்பாற்றிக்கொள்ள மாற்றி பேசுகின்றனர்- துரைமுருகன்

    தேமுதிக நிர்வாகிகள் நொந்துபோய் இருப்பதாகவும், தங்களை காப்பாற்றிக்கொள்வதற்காக மாற்றி பேசுவதாகவும் திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார். #Duraimurugan #DMK
    சென்னை:

    அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், தேமுதிக மாவட்ட செயலாளர்கள் அனகை முருகேசன், இளங்கோவன் ஆகியோர் நேற்று திமுக பொருளாளர் துரைமுருகனை சந்தித்தனர். கூட்டணிக்காக தன்னை சந்தித்ததாகவும், திமுகவில் தொகுதி பங்கீடு முடிந்துவிட்டதால் சீட் இல்லை என்று கூறியதாகவும் துரைமுருகன் கூறினார். ஏற்கனவே சுதீஷ் தன்னிடம் பேசியதாகவும் கூறினார். இந்த விவகாரம் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், துரைமுருகனை சந்தித்தது குறித்து தேமுதிக மாவட்டச்செயலாளர்கள் அனகை முருகேசன், இளங்கோவன் ஆகியோர், சுதீஷ் முன்னிலையில் இன்று விளக்கம் அளித்தனர். அப்போது, அரசியல் காரணங்களுக்காக துரைமுருகனை சந்திக்கவில்லை என்றும், தனிப்பட்ட காரணங்களுக்காக சந்தித்ததாகவும் கூறினர்.



    பின்னர் சுதீஷ் கூறும்போது, நேற்று துரைமுருகனிடம் பேசவில்லை என்றார். அத்துடன், துரைமுருகன் தன்னிடம், திமுக பற்றியும் திமுக தலைமை பற்றியும் எவ்வளவோ பேசியதாகவும், அரசியல் நாகரிகம் கருதி அதை வெளியில் சொல்ல மாட்டேன் என்றும் சுதீஷ் கூறினார்.

    இதுபற்றி துரைமுருகனிடம் கேட்டபோது, தேமுதிக நிர்வாகிகள் நொந்துபோய் இருப்பதாகவும், தங்களை காப்பாற்றிக்கொள்ள இவ்வாறு மாற்றி பேசுவதாகவும் தெரிவித்தார்.

    “தேமுதிக நிர்வாகிகளுக்கு என்னிடம் தனிப்பட்ட முறையில் பேசுவதற்கு எதுவும் இல்லை. நடந்த சம்பவத்தை மீடியாக்களிடம் கூறிவிட்டேன். என்னை சந்தித்த தேமுதிக நிர்வாகிகள் அரசியல் பேசவில்லை என்றால், உடனடியாக கூறியிருக்கலாமே. என்னிடம் பேசிவிட்டு வெளியே சென்றபோது, பத்திரிகையாளர்களை சந்தித்து அரசியல் பேசவில்லை என்று கூறியிருக்கலாமே.

    நேற்று காரில் வந்துகொண்டிருந்தபோது, சுதீஷ் என்னுடன் போனில் பேசினார். இப்போது ஏன் இப்படி பேசுகிறார் என்பது தெரியவில்லை. இதன்மூலம் சுதீஷ் மீது நான் வைத்துள்ள மரியாதையை அவரே கெடுத்துள்ளார்” என்று துரைமுருகன் கூறினார். #Duraimurugan #DMK
    Next Story
    ×