search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை சரிவு
    X

    கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை சரிவு

    கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை குறைந்து உள்ளது. #KoyambeduMarket

    சென்னை:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் வெளி மாவட்டங்களில் இருந்தும் தினமும் லாரிகள் மூலம் காய்கறிகள் வருகின்றன.

    தற்போது கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து அதிகரித்திருப்பதால் விலை வெகுவாக குறைந்துள்ளது. தக்காளி, பெரிய வெங்காயம் ஆகியவை தலா கிலோ ரூ.15-க்கு விற்கப்படுகிறது. சின்ன வெங்காயம் ரூ.30-க்கு விற்கப்படுகிறது.

    மேலும் கத்தரிக்காய் ரூ.15-க்கும், பீன்ஸ் ரூ.35-க்கும், கேரட் ரூ.20-க்கும், முள்ளங்கி ரூ.10-க்கும், பீட்ரூட் ரூ.20-க்கும் அவரைக்காய் ரூ.15-க்கும், வெண்டைக்காய் ரூ.20-க்கும், பாகற்காய் ரூ20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    உருளைக்கிழங்கு ரூ.15-க்கும், முட்டை கோஸ் ரூ.10-க்கும், பச்சைப் பட்டாணி ரூ.35-க்கும், புடலங்காய் ரூ.20-க்கும், முருங்கைக்காய் ரூ.45-க்கும், காலிபிளவர் ரூ.24-க்கும், இஞ்சி ரூ.75-க்கும், பச்சைமிளகாய் ரூ.25-க்கும், மாங்காய் ரூ.50க்கும், சேனைக்கிழங்கு ரூ.13-க்கும் விற்கப்படுகிறது.

    இது குறித்து கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் கூறியதாவது:-

    சென்னைக்கு 50 சதவீத காய்கறிகள் கர்நாடக மாநிலத்தில் இருந்தே கொண்டுவரப்படுகிறது. இந்த மாநிலத்தில் காய்கறி விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து அதிகரித்துள்ளது.

    கடந்த மாதம் தினமும் 230 லாரிகளில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வந்தன. தற்போது 300 லாரிகளில் காய்கறிகள் வருகின்றன. எனவே இந்த மாதம் இறுதி வரை இதே விலை நீடிக்க வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    Next Story
    ×