search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
    X

    தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

    சிவகங்கையில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் ராமச்சந்திரனார் பூங்கா அருகில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.
    சிவகங்கை:

    சிவகங்கையில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் ராமச்சந்திரனார் பூங்கா அருகில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் லதா தலைமை தாங்கினார். பி.ஆர்.செந்தில்நாதன் எம்.பி. முன்னிலை வகித்தார். தமிழக கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். புகைப்பட கண்காட்சியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள், முக்கிய நிகழ்வுகள் குறித்த புகைப்படங்கள், அமைச்சர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள் ஆகியவை இடம் பெற்று இருந்தது.

    இதை தொடர்ந்து அதி நவீன மின்னணு விளம்பர வாகனத்தில் திரையிடப்பட்ட முதல்-அமைச்சரின் சாதனை விளக்க செய்தி மலரை அமைச்சர் பாஸ்கரன், செந்தில்நாதன் எம்.பி. மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். இதில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, சிவகங்கை தாசில்தார் ராஜா, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் கருப்பணராஜவேல் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
    Next Story
    ×