search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செய்தியாளர் சந்திப்பில் அடுக்கடுக்கான கேள்விகள்... அப்செட் ஆன அன்புமணி
    X

    செய்தியாளர் சந்திப்பில் அடுக்கடுக்கான கேள்விகள்... அப்செட் ஆன அன்புமணி

    பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவரிடம் முந்தைய நிலைப்பாடு மற்றும் தற்போதைய கூட்டணி தொடர்பாக கேள்விகளை எழுப்பியதால் கடும் அதிருப்தி அடைந்தார். #AnbumaniRamadoss
    சென்னை:

    சென்னையில் இன்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி  ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பல்வேறு கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பினர். திராவிட கட்சிகளுடன் இனி கூட்டணி இல்லை என்று கூறியதுடன், அதிமுக ஆட்சியையும் முதல்வரையும் கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு இப்போது கூட்டணி வைத்தது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-

    அதிமுக, திமுகவுடன் இனி கூட்டணி வைக்கமாட்டோம் என்று கூறியது உண்மைதான். அப்போது இருந்த சூழல் வேறு, தற்போதுள்ள சூழல் வேறு. சூழல் மாறியதால் கூட்டணி வைத்துள்ளோம். 8 ஆண்டுகளாக தனித்து நின்றோம். யாராவது எங்களைப் பாராட்டினீர்களா? பாமக தனித்து நின்றபோது ஒரு எம்எல்ஏவை கூட மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை.

    நாங்கள் கூறிய ஊழல் புகார்கள் தொடர்பாக சிபிஐ விசாரணைகள் முடிந்த பின்னர்தான் தெரியவரும். பாமக அளித்த ஊழல் புகார் குறித்து ஆளுநர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார்.



    மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக திமுகவும் எங்களிடம் பேசியது. இப்போது தோல்வி பயத்தால் ஸ்டாலின் எங்கள் மீது அவதூறுகளை வீசுகிறார். ஆனால் நாங்கள் அவரை மறுவிமர்சனம் செய்ய மாட்டோம்.

    அதிமுக அரசின் 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    செய்தியாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு அன்புமணி ராமதாஸ் நேரடியாக பதில் அளிக்காமல் மறைமுகமாக பதிலளித்தார். அதிமுகவுக்கு எதிராக இதற்கு முன்னர் வைத்த விமர்சனங்கள் குறித்து கேள்வி எழுப்பியபோது, சற்று கோபமடைந்த அன்புமணி, செய்தியாளருடன் வாக்குவாதம் செய்தார். எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு, அமைதியாக இருங்கள் என்று கூறினார். #AnbumaniRamadoss
    Next Story
    ×