search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமதாஸ் ஜூனியர் மோடி - இளங்கோவன்
    X

    ராமதாஸ் ஜூனியர் மோடி - இளங்கோவன்

    ராமதாஸ் ஜூனியர் மோடி என தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். #Elangovan #Ramadoss

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. கூட்டணியில் மோடியும் இருக்கிறார். ஜூனியர் மோடியான ராமதாசும் இருக்கிறார். பல வகையில் மோடியும், ராமதாசும் ஒரே மாதிரியான ஆட்கள் தான். மோடி எப்படி வாக்குறுதிகளை தந்து அதில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லையோ, அதே போல் டாக்டர் ராமதாசும் பல வாக்குறுதிகளை தந்திருக்கிறார். நாங்கள் பதவிக்கு வந்தால் எங்கள் குடும்பத்தை சேர்ந்த யாருக்கும் பதவி தர மாட்டோம், அப்படி செய்தால் என்னை சவுக்கால் அடியுங்கள் என்று சவுக்கை கூட காண்பித்தார். அ.தி.மு.க.வோடு எப்போதும் கூட்டு சேர மாட்டோம், அவர்கள் ஊழல்வாத கட்சி என்று கூறினார்.

    இன்று எப்படி மோடி வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றினாரோ அதே போல் ராமதாஸ் வாக்குறுதிகளை மறந்து மக்களை ஏமாற்றி அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளார். நிச்சயமாக இந்த கூட்டணி நடைபெற உள்ள தேர்தலில் பெரிய அளவில் தோல்வியடையும். அ.தி.மு.க. தனியாக நின்றால் கூட அனேகமாக டெபாசிட்டாவது பெற முடியும். ஆனால் பா.ஜ.க.வோடும், பா.ம.க.வோடும் சேர்ந்த காரணத்தால் அந்த அணி டெபாசிட் கூட வாங்க முடியாது. காங்கிரஸ் கூட்டணி ஏற்கனவே பலமாக உள்ளது. மதசார்பற்ற தன்மையில் நம்பிக்கை உள்ளவர்கள் யார் வந்தாலும் மு.க.ஸ்டாலின் அதை பரிசீலித்து ஏற்றுக்கொள்வார்.

    இவ்வாறு அவர் கூறினார். #Elangovan #Ramadoss

    Next Story
    ×