search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்றத் தேர்தல்: திமுகவில் 25-ம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம்
    X

    பாராளுமன்றத் தேர்தல்: திமுகவில் 25-ம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம்

    பாராளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் 25-ம் தேதி முதல் விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. #LSPolls #DMKApplications
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதேசமயம், போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்று, தகுதி வாய்ந்த வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    தமிழகத்தில் அதிமுக சார்பில் 40 தொகுதிகளில் இருந்தும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதேபோல் தேமுதிகவும் 40 தொகுதிகளில் இருந்தும் விருப்ப மனுக்களை வழங்கலாம் என கூறியுள்ளது. நாளை முதல் மார்ச் 6-ம் தேதி வரை விருப்ப மனுக்களை கட்சி தலைமை அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பிரதான எதிர்க்கட்சியான திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்காக 25-ம் தேதி விருப்ப மனு விநியோகம் தொடங்குகிறது. 

    இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


    மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் 25-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். அண்ணா அறிவாலயத்தில் 1000 ரூபாய் செலுத்தி விருப்ப மனுக்களை வாங்கி பூர்த்தி செய்து கொடுக்கவேண்டும். 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன. 

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி மாலை 6 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். வேட்பாளர் விண்ணப்ப கட்டணமாக 25 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளுக்கு, விண்ணப்ப கட்டணம் செலுத்தியிருந்தால், அது திருப்பி கொடுக்கப்படும்.

    இதேபோல் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோரும் மார்ச் 1-ம் தேதி முதல் 7-ம் தேதிக்குள் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #LSPolls #DMKApplications
    Next Story
    ×