search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடலூர் பகுதியில் புளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் அதிர்ச்சி
    X

    கூடலூர் பகுதியில் புளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் அதிர்ச்சி

    தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் புளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம், கூடலூர் பகுதி மானாவாரி நிலங்களில் சுமர் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயிகள் புளியமரங்களை வைத்து பராமரித்து வருகிறார்கள்.

    இந்தப் பகுதிகளில் விளையும் புளி அதிக புளிப்புச் சுவையுடனும், தசை பிடிப்புகள் அதிகம் உள்ளதாகவும், நீண்ட நாட்கள் வரை கெடாமல் இருப்பில் வைத்து கொள்வதற்காக ஏற்றதாகவும் இருக்கும். இதனால் வெளியூர் வியாபாரிகள்அதிக அளவில் இங்கு வந்து புளியை மொத்தமாக கொள்முதல் செய்கின்றனர். தற்போது இப்பகுதியில் புளி விளைச்சல் அதிகரித்து இருக்கிறது.

    இதன் காரணமாக வியாபாரிகள் வாரந்தோறும் திங்கட்கிழமை நாட்களில் புளி கொள்முதல் செய்து வருகிறார்கள். கடந்த ஆண்டு 100 கிலோ ஓடு நீக்கிய புளி ரூ.6000 ம் முதல் ரூ.6500 வரை கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு 100 கிலோ ஓடு நீக்கிய புளி ரூ.3300 முதல் ரூ 3500 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு பாதி விலைக்கே விற்பனை ஆகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறும்போது தேனி மாவட்ட வியாபாரிகள் சிலர் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகளை தடுத்து நிறுத்தி அவர்களுக்குத் தேவையான புளி மூட்டைகளை நேரடி கொள்முதல் செய்கின்றனர். கூடலூர் பகுதிக்கு வெளி மாவட்ட வியாபாரிகள் வராததால் உள்ளுர் வியாபரிகளுக்கு குறைந்த விலைக்கே கொள்முதல் செய்யபட வேண்டிய அவல நிலை உள்ளது.

    எனவே, தமிழக அரசு கூடலூர், கம்பம் பகுதிகளில் குளிர்சாதன குடோன்கள் அமைத்தோ அல்லது அரசே விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் செய்து நியாயவிலை கடைகள் மூலம் மக்களுக்கு வினியோகம் செய்வோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

    Next Story
    ×