search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாட்டு நலனை விரும்புபவர்கள் பாஜக கூட்டணியில் இடம்பெறுவார்கள் - பொன்.ராதாகிருஷ்ணன்
    X

    நாட்டு நலனை விரும்புபவர்கள் பாஜக கூட்டணியில் இடம்பெறுவார்கள் - பொன்.ராதாகிருஷ்ணன்

    நாட்டு நலனை விரும்புபவர்கள் பாஜக கூட்டணியில் இடம்பெறுவார்கள் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். #BJP #PonRadhakrishnan

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள மெகா கூட்டணி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. தலைவர்கள் சந்தித்துக்கொள்கிறார்கள் என்ற செய்தி வெளி வந்ததும் சமூக ஊடகங்கள் மற்றும் செய்தி ஊடகங்களில் தகவல்கள் வேகமாக பரவுவது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

    இன்னும் எத்தனை கட்சிகள் இந்த கூட்டணியில் இடம் பெறும் என்பது அ.தி.மு.க.விடம் தான் உள்ளது. பல கட்சிகள் இணையும், அதற்கான பணிகளை அ.தி.மு.க. மேற் கொண்டு வருகிறது.

    அ.தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி வைத்துள்ளதை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்து வருகிறார். அவர் பேசுவது அநாகரீகமான வார்த்தைகள். சாக்கடை எங்கு ஓடுகிறது என சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடிய வார்த்தைகள்.

    பிரதமர் மோடி அரசாங்கம் மீண்டும் ஏற்படுவது நாட்டிற்கு தேவை. 5 ஆண்டுகளில் கொண்டுவந்துள்ள திட்டங்கள் அனைத்தும் அடித்தள மக்களுக்கானது. உலக அளவில் இந்தியா முதல் நாடாக மாறும். இதனை அடுத்த 5 ஆண்டுகால ஆட்சி தீர்மானிக்கும்.

    ஜாதி, மதம், இனம் மற்றும் மொழிகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் தலை நிமிர்ந்து கைகோர்க்கும் சூழ்நிலை அடுத்த 5 ஆண்டுகளில் ஏற்படும். அப்படிப்பட்ட நிகழ்விற்கு ஒவ்வொரு இந்தியர்களும், அரசியல் கட்சிகளும் ஒன்று சேரவேண்டும்.

    தே.மு.தி.க.வுடன் தொடர்ந்து கூட்டணிக்கான பேச்சுவார்தை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று இரவு வரை கூட இந்த பேச்சுவார்த்தை நீடித்தது. பா.ஜ.க. திருச்சி தொகுதியில் போட்டியிடுவது என்றில்லை. பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளும் எங்களுடையது தான். திருச்சியில் நிற்பது யாராக இருந்தாலும் அவர் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் தான்.

    புல்வாமா தாக்குதல் பாதுகாப்பு, ராணுவம் தொடர்புடையது. பிரதம் நரேந்திர மோடி மீது 130 கோடி இந்திய மக்களும் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். இதில் அரசியல் பாகுபாடுகளின் தேசம் என்ற ஒத்த கருத்துடன் இருக்க வேண்டும். பி.ஜே.பி., காங்கிரஸ், கம்யூனிஸ்டு என்று பிரித்து பார்க்க கூடாது.

    தேர்தல் கூட்டணி பேச்சு வார்த்தைகளின் போது நானும் உடன் இருந்துள்ளேன். மத்திய மந்திரி பியூஸ் கோயல் பா.ம.க. கூட்டணியை அறிவித்து செல்லவில்லை. பா.ஜ.க.வின் கூட்டணியை அறிவித்துள்ளார். நாட்டு நலனை விரும்புபவர்கள் பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெறுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #PonRadhakrishnan

    Next Story
    ×