search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமருகலில் புதிதாக கட்டப்பட்டு 15 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் வணிக வளாகம்
    X

    திருமருகலில் புதிதாக கட்டப்பட்டு 15 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் வணிக வளாகம்

    திருமருகலில் புதிதாக கட்டப்பட்டு 15 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் வணிக வளாகத்தை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
    திருமருகல்:

    நாகை மாவட்டம் திருமருகலில் சந்தைப்பேட்டை சாலையில் அரசு சார்பில் சுமார் ரூ.15 லட்சம் செலவில் 5 கடைகள் கொண்ட புதிய வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த வணிக வளாகம் கட்டப்பட்டு 15 ஆண்டுகளாகியும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் இந்த கட்டிடம் பாழடைந்து காணப்படுகிறது. இந்த கட்டிடத்தை சீர்செய்து மக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதுகுறித்து கடந்த ஆண்டு ‘தினத்தந்தி‘ நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து கட்டிடத்துக்கு உடனடியாக வர்ணம் பூசப்பட்டது. அப்போது இந்த 5 கடைகளில் 4 கடைகளை மட்டும் வாடகைக்கு விட திருமருகல் ஒன்றிய ஆணையர் ஏல அறிவிப்பும் செய்திருந்தார். ஆனால், ஏதோ காரணங்களால் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.

    மக்கள் வரி பணத்தில் கட்டப்பட்டு கடந்த 15 ஆண்டுகளாக வணிக வளாகம் பூட்டியே கிடப்பதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் சில ஆண்டுகள் இந்த கட்டிடத்தின் உறுதி தன்மை பாதிக்கப்படும் என பொதுமக்கள் வேதனையுடன் கூறுகின்றனர். எனவே புதிதாக கட்டப்பட்டு 15 ஆண்டுகளாக பயன்பாடற்று பூட்டியே கிடக்கும் இந்த அரசு வணிக வளாகத்தை உடனே திறந்து மக்களின் பயன்பாட்டிற்கு விட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
    Next Story
    ×