search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாய்க்கும்-ஆட்டுக்கும் திருமணம் செய்த இந்து முன்னணியினர்
    X
    காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாய்க்கும்-ஆட்டுக்கும் திருமணம் செய்த இந்து முன்னணியினர்

    ஆட்டுக்கும் - நாய்க்கும் திருமணம் செய்து எதிர்ப்பு - கோபியில் இந்து முன்னணி போராட்டம்

    கோபியில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்து முன்னணியினர் ஆட்டுக்கும் நாய்க்கும் திருமணத்தை நடத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். #ValentinesDay
    கோபி:

    இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர் தினத்தையொட்டி காதலர்கள் ஒருவருக்கொருவர் நினைவு பரிசுகளை கொடுத்து ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறி கொண்டனர்.

    இந்த காதலர் தினத்துக்கு இந்து முன்னணி சார்பில் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு பல்வேறு நூதனப்போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரி அணைக்கு காதலர் தினத்தன்று ஏராளமான காதலர்கள் ஜோடி-ஜோடியாக வருவார்கள்.

    அவர்களை தடுக்கும் வகையில் கொடிவேரி அணையில் நுழைவு பகுதியில் இன்று காலை இந்து முன்னணியினர் சிலர் வந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்கள் ஒரு ஆட்டுக்கும்- நாய்க்கும் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நூதன திருமணத்தை நடத்தி வைத்தனர். அப்போது அவர்கள் “காதலர் தினத்தை வெறுப்போம் காதலர்களை விரட்டுவோம்”என்று கோ‌ஷமிட்டனர்.

    இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்து முன்னணியினரின் போராட்டத்தால் கொடிவேரி அணைக்கு வந்த காதல் ஜோடியினர் ஜகா வாங்கினர். அவர்கள் சென்ற பிறகு இரு சக்கர வாகனங்களில் கொடிவேரி அணைக்கு சென்றனர். காதல் மொழி பேசி மகிழ்ந்தனர். #ValentinesDay
    Next Story
    ×