search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமங்கலம் அருகே 4 வழிச்சாலையில் பிணத்தை வைத்து மறியல் - 12 பேர் மீது வழக்கு
    X

    திருமங்கலம் அருகே 4 வழிச்சாலையில் பிணத்தை வைத்து மறியல் - 12 பேர் மீது வழக்கு

    திருமங்கலம் விருதுநகர் நான்கு வழிச்சாலையில் பிணத்துடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள நல்லமநாயக்கன்பட்டி கிராமத்தில் ஆதிதிராவிட மக்கள் சுடுகாடு வசதி இன்றி இருந்தனர் கடந்த 2015ஆம் ஆண்டு மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்ததன் அடிப்படையில் ஆதிதிராவிட மக்கள் நான்குவழிச் சாலை அருகே உள்ள கொக்கலாஞ்சேரி கண்மாய்க்குள் 12 சென்ட் இடம் சுடுகாட்டிற்கு ஒதுக்கப்பட்டது

    இந்நிலையில் நல்லமநாயக்கன்பட்டி சேர்ந்த மாரியப்பன் மனைவி அன்னக்கிளி(60) இயற்கை மரணம் அடைந்தார். இவரை அடக்கம் செய்வதற்காக புதிய சுடுகாட்டிற்கு கொண்டு வரும்போது சுடுகாடு அருகே உள்ள இடத்தைச் சேர்ந்த உரிமையாளர்கள் இங்கு புதைக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த ஆதிதிராவிடர் மக்கள் திருமங்கலம் விருதுநகர் நான்கு வழிச்சாலையில் பிணத்துடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த திருமங்கலம் டி.எஸ்.பி. மற்றும் கோட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி புதிய சுடுகாட்டில் பிணத்தை புதைப்பதற்கு அனுமதி அளித்து அதன் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதனிடையே போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் 4 வழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டதாக அன்னக்கிளியின் உறவினர்கள் கருப்பையா, மணிகண்டன், கருப்பு, ராமர், பாலா, சின்னா, ராசுக்குட்டி, மருதுபாண்டி, குருசாமி, மாரியப்பன், விஜயபாண்டி, பெரியாத்தாள் ஆகிய 12 பேர் மீது கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #tamilnews
    Next Story
    ×