search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதுகுளத்தூர் தொகுதி கண்மாய்களுக்கு அடுத்த ஆண்டு முதல் வைகை தண்ணீர்
    X

    முதுகுளத்தூர் தொகுதி கண்மாய்களுக்கு அடுத்த ஆண்டு முதல் வைகை தண்ணீர்

    முதுகுளத்தூர் தொகுதி கண்மாய்களுக்கு அடுத்த ஆண்டு முதல் வைகை தண்ணீர் திறந்து விடப்படும் என்று தடுப்பணை கட்டுவதற்கான பூமி பூஜை விழாவில் அமைச்சர் மணிகண்டன் உறுதி அளித்தார்.
    கமுதி:

    கமுதி அருகே காக்குடி கிராமத்தின் அருகில் உள்ள குண்டாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. விழாவுக்கு அமைச்சர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் விசுவநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொறியாளர் ராமநாதன் வரவேற்று பேசினார்.

    அதனை தொடர்ந்து குண்டாற்றின் குறுக்கே ரூ.3 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் 85 மீட்டர் நீளத்துக்கு தடுப்பணை கட்டும் பணிகளை அமைச்சர் மணிகண்டன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- கமுதி அருகே காக்குடியில் குண்டாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க கடந்த 2017-ம் ஆண்டு ராமநாதபுரத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் நான் வைத்த கோரிக்கையை ஏற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு செய்தார். இத்திட்டம் ஓராண்டுக்கு முன்பே அமல்படுத்தப்பட்டு தற்போது பயன்பாட்டுக்கு வந்திருக்கும்.

    ஆனால் இத்தடுப்பணை அமைக்க ஒப்பந்தகாரர் ஒருவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதன் பிறகு அரசு சார்பில் தடையில்லா சான்று பெற்ற பின்னரே இத்திட்டம் ஓராண்டு தாமதமாக தற்போது தொடங்கப்பட்டுஉள்ளது. இத்திட்டத்தின் மூலம் கமுதி தாலுகாவில் காக்குடி, கமுதி, மரக்குளம், விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகாவில் உள்ள முத்துராமலிங்க புரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரம் பெருகும் வாய்ப்பு உள்ளது. மேலும் 709 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

    ராமநாதபுரத்தில் சட்டக்கல்லூரி அமைத்ததுபோல் மருத்துவ கல்லூரியையும் முதல்-அமைச்சரிடம் போராடியாவது கொண்டுவரப் படும். ஓராண்டுக்கு முன்பாக முதல்-அமைச்சரிடம் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரில் கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என மனு கொடுத்தேன். தற்போதைய பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு வெளியாகி இருப்பது மண்ணின் மைந்தர் அப்துல்கலாமிற்கு செய்யும் மரியாதையாகும். இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் கமுதி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.காளிமுத்து, முன்னாள் ஒன்றிய செயலாளர் மீனாட்சிசுந்தரம், உதவி செயற்பொறியாளர்கள் ராமமூர்த்தி, குணசேகரன், பொறியாளர் செல்வராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் கிருஷ்ணன், கே.பாப்பாங் குளம் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் சத்தியமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர் முத்துராமலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×