search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எந்த ஆட்சி வந்தாலும் ஹைட்ரோ கார்பனை எடுக்க விடமாட்டோம்- அய்யாக்கண்ணு
    X

    எந்த ஆட்சி வந்தாலும் ஹைட்ரோ கார்பனை எடுக்க விடமாட்டோம்- அய்யாக்கண்ணு

    தமிழகத்தில் எந்த ஆட்சி வந்தாலும் ஹைட்ரோ கார்பனை எடுக்க விடமாட்டோம் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். #ayyakannu #hydrocarbon #tngovt

    திருச்சி:

    திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது :-

    விவசாயிகளுக்கு லாபகரமான விலை, கடன் தள்ளுபடி அளிக்கும் கட்சிகளுக்கே விவசாயிகளின் வாக்கு. அவ்வாறு விவசாயிகளுக்கு தேர்தல் அறிக்கையில் திட்டங்களை அறிவிக்காத கட்சிகளுக்கு எதிராக 29 மாநிலங்களிலும் பிரசாரம் செய்வோம். மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான எந்த திட்டங்களும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.‌ தமிழக பட்ஜெட்டிலும் மக்கள் தொகையில் 20 சதவீதம் உள்ள விவசாயிகளுக்கு ஒரு லட்சம் கோடி நிதி ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால் அதிலும் விவசாயிகளுக்கான எந்த திட்டமும் இல்லை.

    விவசாயிகள் கடனிலே பிறந்து வாழ்ந்து மடிய வேண்டும் என்ற நிலையில் உள்ளோம். கரும்பு விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய ரூ.400 கோடியை திருப்பி அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு வீணாக செல்வதை தடுக்காத தமிழக அரசை கண்டித்தும் சென்னையில் இந்த மாதம் 25ந் தேதிக்கு பிறகு தற்கொலை செய்யும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

    மேலும் வருகிற 21ந் தேதியும் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். மார்ச் 28, 29-ந்தேதிகளில் டெல்லியில் போராட்டம் நடத்த வேண்டும் என முடிவு செய்துள்ளோம். எந்த ஆட்சி வந்தாலும் ஹைட்ரோகார்பன் எடுக்க விடமாட்டோம். 

    இவ்வாறு அவர் கூறினார். #ayyakannu #hydrocarbon #tngovt

    Next Story
    ×