search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆண்டிப்பட்டி பகுதியில் மினி லாரி- ஆட்டோ திருடிய கொள்ளையன் கைது
    X

    ஆண்டிப்பட்டி பகுதியில் மினி லாரி- ஆட்டோ திருடிய கொள்ளையன் கைது

    ஆண்டிப்பட்டி பகுதியில் மினி லாரி- ஆட்டோ திருடிய கொள்ளையனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சேடப்பட்டி கிராமத்தை சேர்ந்த குமார்(38) என்பவர் மினிலாரி ஓட்டி வருகிறார்.

    இவர் தனது மினிலாரியை ஆண்டிப்பட்டி பாரதஸ்டேட் வங்கி அருகில் நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றார். மீண்டும் காலை வந்து பார்த்த போது மினிலாரி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து குமார் ஆண்டிப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    இதேபோல வைகை அணை அருகே உள்ள முதலக்கம்பட்டியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான ஜெகதீஸ்வரன்(வயது30) என்பவர் தனது ஆட்டோவை காணவில்லை என்றும் போலீசில் புகார் செய்தார். அடுத்தடுத்து வாகனங்கள் திருடு போன சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

    அதோடு ரோந்து சென்றனர். அப்போது தேனியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த கெங்குவார்பட்டியை சேர்ந்த ராஜபாண்டி(வயது17)யை பிடித்து விசாரணை நடத்திய போது ஆட்டோ மற்றும் மினிலாரியை திருடியதை ஒப்புக்கொண்டார்.

    இவர் ஆண்டிப்பட்டியில் உள்ள தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வந்த போது ரோட்டில் நின்றிருந்த மினிலாரியை திருடி வைகை அணை வழியாக முதலக்கம்பட்டி சென்ற போது மினிலாரி பழுது ஏற்பட்டு நின்றுவிட்டது. அந்தமினிலாரியை அங்கு நிறுத்திவிட்டு, அதே பகுதியில் நின்றிருந்த ஆட்டோவை திருடி தேனிக்கு சென்றார்.

    அப்போது ஆட்டோவும் திடீரென நின்றுவிட்டதால், ஆட்டோவை நிறுத்திவிட்டு தப்பி சென்ற போது போலீசாரிடம் சிக்கிகொண்டார்.

    இதனையடுத்து ராஜபாண்டியை கைது செய்த ஆண்டிப்பட்டி போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். ராஜபாண்டி மீது ஏற்கனவே பல திருட்டு வழக்குகள் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×