search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மன்னார்குடி அருகே கொத்தடிமையாக இருந்த 2 சிறுவர்கள் மீட்பு
    X

    மன்னார்குடி அருகே கொத்தடிமையாக இருந்த 2 சிறுவர்கள் மீட்பு

    மன்னார்குடி அருகே கொத்தடிமைகளாக இருந்து ஆடுமேய்த்த 2 சிறுவர்கள் மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மன்னார்குடி:

    படிக்கும் வயதில் சிறுவர்-சிறுமிகளை வேலைக்கு சேர்க்க கூடாது என்றும், அவ்வாறு சேர்ப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இருந்த போதிலும் சிறுவர்களை வேலைக்கு சேர்ப்பதும், கொத்தடிமைகளாக வைத்திருப்பதும் தொடர்ந்து வருகிறது.

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ராமாபுரம் ஊராட்சிக்குட்பட்ட நாகராஜபுரத்தில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்த அருள்பாண்டி (வயது 14) கண்ணன் (13) ஆகிய சிறுவர்கள் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கார்மேகம் என்பவர் நிலத்தில் ஆடுமேய்க்கும் கொத்தடிமைகளாக பணியாற்றுவதாக திருவாரூர் மாவட்ட சைல்டுலைன் அமைப்பிற்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து நாகராஜபுரம் விரைந்த சைல்டுலைன் அமைப்பின் பணியாளர்கள் சி.பிரகலாதன், ஏ.முருகேஷ், காந்திமதி, மரகதமணி ஆகியோர் வயலில் ஆடுமேய்த்துக்கொண்டிருந்த சிறுவர்களை மீட்டு மன்னார்குடி கோட்டாட்சியர் பத்மாவதி முன்னிலையில் ஆஜர்படுத்தி திருவாரூர் குழந்தைகள் குழுமத்திடம் ஒப்படைத்தனர், மன்னார்குடி அருகே கொத்தடிமைகளாக இருந்த 2 சிறுவர்கள் மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    Next Story
    ×