search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசிய காட்சி.
    X
    விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசிய காட்சி.

    அரசு திட்டங்களுக்கு வரவேற்பு கிடைத்துள்ளதை பொறுக்க முடியாமல் ஸ்டாலின் குற்றம் சாட்டுகிறார்- முதல்வர்

    அரசின் திட்டங்களுக்கு பொதுமக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளதை பொறுக்க முடியாமல் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #Edappadipalaniswami #MKStalin
    சேலம்:

    சேலம் கந்தம்பட்டி உள்பட 3 இடங்களில் ரூ. 40 கோடி மதிப்பீட்டில் புதிய பாலங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று சேலத்தில் நடந்தது.

    விழாவில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி பேசியதாவது:-

    இன்றைக்கு சேலம் மாநகரம் ஒரு வளர்ந்து வருகின்ற ஒரு மாநகரம். இந்த மாநகரத்தில் அதிகமான போக்குவரத்து நெரிசல் இருந்த காரணத்தினால் அம்மா கவனத்திற்கு எடுத்துச் சென்றவுடன் அவர் இந்த போக்குவரத்து நெரிசலை முற்றிலும் குறைப்பதற்காக இன்றைக்கு சேலம் மாநகர பகுதியில் பல்வேறு உயர்மட்டம் பாலம் கட்டுவதற்காக அறிவித்து அம்மா ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது.

    இந்த பணிகள் எல்லாம் வேகமாக, விரிவாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

    இன்றைக்கு பல்வேறு பாலப்பணிகள் நிறைவு பெற்று போக்குவரத்து பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டு இன்றைக்கு போக்குவரத்து எந்த ஒரு நெரிசலும் இல்லாமல் வாகனங்கள் செல்கின்ற காட்சியை நாம் காண்கின்றோம்.

    கந்தம்பட்டி பை-பாஸ் சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், அங்கே ஒரு உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தார்கள். எம்.எல்.ஏ. வெங்கடாஜலம், எம்.பி. பன்னீர் செல்வம், சக்திவேல் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் பலபேர் கோரிக்கை வைத்த காரணத்தினாலே அம்மா அரசு ரூ.33 கோடி மதிப்பீட்டில் உயர்மட்டபாலம் இன்றைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு இருக்கிறது.

    ஆகவே தேசிய நெடுஞ்சாலை இரும்பாலை பிரிவில் ஒரு உயர்மட்ட பாலம், ஏ.வி.ஆர். ரவுண்டானா பகுதியில் ஒரு உயர்மட்ட பாலம், திருவாக்கவுண்டனூரில் ஒரு உயர்மட்ட பாலம், கந்தம்பட்டி- இளம்பிள்ளை பிரிவு சாலையில் ஒரு உயர் மட்டபாலம் என 4 பாலங்கள் கட்டி முடிக்கின்றபோது எந்த பகுதியிலுமே போக்குவரத்து நெரிசல் என்ற பிரச்சனை எழாமல் அரசு பார்த்துக் கொண்டிருக்கிறது.

    இதில் 3 மேம்பாலங்கள் கட்டப்பட்டு போக்குவரத்து பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது. இது 4-வது பாலம். கந்தம்பட்டி பை-பாஸ் சாலையில் அடிக்கல் நாட்டி இருக்கிறோம்.

    இன்றைக்கு ஆங்காங்கே போய் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு பஞ்சாயத்தில் அமர்ந்து கிராம சபை கூட்டம் என்று நடத்துகிறார்.

    கோப்புப்படம்

    ஏற்கனவே அரசாங்கம் கிராம சபை கூட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறது. இவர் தனியாக ஒரு கூட்டத்தை கூட்டி ஆங்காங்கே கிராமத்தில் போய் பேசிக்கிட்டு இருக்கிறார். பேசும் போது பல்வேறு குற்றச்சாட்டுகளை அரசின் மீது சுமத்துகிறார்.

    அதை தெளிவுபடுத்துவதற்காத்தான் அடிக்கல் நாட்டு விழாவில் நான் பேசுகிறேன். அம்மாவுடைய ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள் மக்களுக்கு எப்படி போய் சேர்ந்து கொண்டிருக்கின்றது என்பதற்கு பல புள்ளி விபரங்களை நான் கூறியிருக்கிறேன்.

    மு.க.ஸ்டாலின் கூட்டத்தில் அங்கிருக்கின்ற ஒரு சில மக்களை சந்தித்து இந்த ஆட்சி பற்றி விமர்சனம் செய்கிறார். இந்த ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை. அப்படி என்று ஒரு தவறான குற்றச்சாட்டுகளை சொல்லிக்கிட்டு இருக்கிறார்.

    அம்மா முதல்-அமைச்சராக இருந்த காலத்தில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள். அதைத்தொடர்ந்து அம்மா மறைவிற்கு பிறகு அம்மாவுடைய அரசு தொடர்ந்து செயல்படுத்தி மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றிருக்கின்றோம்.

    இதை பொறுக்க முடியாத மு.க.ஸ்டாலின் ஆங்காங்கே கிராமத்தில் போய் சின்ன சின்ன கூட்டத்தை போட்டு பேசிக்கிட்டு இருக்கிறார். அங்கு அவர் பேசுகின்றபோது கிராமம் தான் கோவில் என்கிறார்.

    இதெல்லாம் ஏற்கனவே நமக்கு தெரியும். நான் கிராமத்தில் பிறந்து வாழ்ந்தவன். அவர் நகரத்தில் இருக்கிறதினால் கிராமம் ஒரு கோவில் என அவர் இப்போது தான் கண்டுபிடித்து இருக்கிறார். ஆகவே அவரது புதுகண்டுபிடிப்புக்கு இன்றைக்கு கின்னஸ் சாதனை கிடைத்த மாதிரி அவர் சாதனை படைத்திருக்கிறார்.

    கிராமத்தில் இருக்கிற மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அம்மா பல்வேறு திட்டங்களை அறிவித்து இருக்கின்றார்கள். இன்றைக்கு கிராமத்தில் ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்த மாணவ, மாணவிகள் திருமண உதவித் தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டும் என்பதற்காகத்தான் அந்த திட்டத்தை அறிவித்து கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

    இந்த திட்டம் முழுவதுமே கிராமத்தில் வாழ்கின்ற மக்கள் முழுமையாக பயன்பெற வேண்டும் என்பதற்காக அறிவிக்கப்பட்ட திட்டம். உயிரோட்டம் உள்ள திட்டம். யாராலும் அழிக்க முடியாத திட்டம். யார் ஆட்சிக்கு வந்தாலும் அம்மா கொடுத்த திட்டத்தை யவராலும் நிறுத்த முடியாத அளவிற்கு திட்டத்தை கொண்டு வந்தவர் அம்மா. அவர்கள் விலையில்லா வெள்ளாடுகள் வழங்குகின்ற திட்டம், மகளிர் சுய உதவிக்குழு திட்டம் போன்றவை.

    மு.க.ஸ்டாலின் எந்த சுய உதவிக்குழுவுக்கும் கடன் கொடுக்கவில்லை என்று சொன்னார். அவருக்கு எங்கே தெரிகிறது புள்ளி விபரம். புள்ளி விபரம் தெரிந்தால் தானே அவரால் பேச முடியும். எப்ப பார்த்தாலும் என்னை பற்றிய நினைப்புதான் முழுசாக அவருக்கு இருக்கிறது. அவர் நினைக்காத நேரமே கிடையாது. தூங்கும்போதும் கூட என்னை நினைத்துக் கொண்டு தான் தூங்குவார் என்று நினைக்கிறேன்.

    இந்த எடப்பாடி பழனிசாமியை முதல்- அமைச்சர் பதவியில் இருந்து அகற்ற வேண்டும். அந்த முதல்-அமைச்சர் பதவியில் இருந்து அகற்றுவதற்கு என்ன? என்ன? தில்லுமுல்லு செய்ய வேண்டும். என்ன சூழ்ச்சி செய்ய வேண்டும். யார்?யாரெல்லாம் போராட்டத்திற்கு தூண்டி விடவேண்டும். இந்த நாட்டில் எப்படியொல்லாம் சட்டம் ஒழுங்கு சீர்குலைவதற்கு என்ன? என்ன? சூழ்ச்சி செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்து கொண்டிருக்கிறார். அத்தனையும் மக்களுடைய ஆதரவோடு முறியடிக்கப்பட்ட ஆட்சி அம்மாவுடைய ஆட்சி.

    அம்மாவுடைய அரசு ஏழைகளுக்கான அரசு.

    சேலத்தில் பஸ் போர்ட் அமைக்க மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. அது தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கி உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார். #Edappadipalaniswami #MKStalin
    Next Story
    ×