search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ம.தி.மு.க. நிர்வாகிகள் நீக்கம் - வைகோ நடவடிக்கை
    X

    ம.தி.மு.க. நிர்வாகிகள் நீக்கம் - வைகோ நடவடிக்கை

    கோவை தனமணி வெங்கடபதி, வெங்கடபதி, ஸ்ரீமான் சுந்தரம் ஆகியோர் மதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார். #Vaiko
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    ம.தி.மு.க. ஊடக விவாதக்குழு உறுப்பினரும், பேச்சாளருமான கோவை தனமணி வெங்கடபதி கட்சியின் கண்ணியத்துக்கும், கட்டுப்பாட்டுக்கும், கொள்கை கோட்பாடுகளுக்கும் முரண்பட்டு செயல்பட்டதால் ம.தி.மு.க. அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அவர் வகித்து வரும் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். அவரது கணவர் வெங்கடபதியும், கோவை மாநகர் மாவட்ட இலக்கிய அணித் தலைவர் ஸ்ரீமான் சுந்தரமும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

    இவ்வாறு அந்த அறிவிப்பில் அவர் கூறியுள்ளார்.  #Vaiko
    Next Story
    ×