search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சை கல்லணை கால்வாயில் வாலிபர் பிணம்- கொலையா? போலீசார் விசாரணை
    X

    தஞ்சை கல்லணை கால்வாயில் வாலிபர் பிணம்- கொலையா? போலீசார் விசாரணை

    தஞ்சை கல்லணை கால்வாயில் அடையாளம் தெரியாத வாலிபர் பிணமாக கிடந்தார். கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    மேட்டூர் அணையில் திறந்து தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தினமும் ஆயிரம் கனஅடியில் இருந்து 2 ஆயிரம் கனஅடிவரை தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

    இதனால் தஞ்சை கல்லணை கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தஞ்சை கல்லணை கால்வாய் ஆற்றில் தினமும் ஏராளமான சிறுவர்கள் ஆபத்தை உணராமல் குளித்தும், பொதுமக்கள் துணிதுவைப்பது உள்ளிட்டவைகளை செய்து வந்தனர்.

    கடந்த மாதம் 28-ந் தேதியுடன் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதையடுத்து கல்லணையில் இருந்தும் டெல்டா மாவட்டத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது.

    இதனால் கல்லணை கால்வாயில் தண்ணீர் குறைந்த அளவே செல்கின்றது. இந்நிலையில் இன்று காலை தஞ்சை சுற்றுலா மாளிகை அருகே உள்ள புது ஆற்றுப்பாலத்தின் நடைபாதையில் கல்லணை கால்வாயில் குறைந்த அளவே செல்லும் தண்ணீரை ரசித்தபடி பொதுமக்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது தண்ணீருக்கு அடியில் டவுசர், சட்டை அணிந்துபடி தலைகுப்புற வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தஞ்சை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கல்லணை கால்வாயில் வாலிபர் பிணம் கிடப்பதை கேள்விப்பட்டு அப்பகுதியை சேர்ந்து ஏராளமான பொதுமக்கள் அந்தவழியாக சென்ற வாகன ஓட்டிகள் வாலிபரின் பிணத்தை பார்க்க கூடினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தண்ணீருக்கு அடியில் டவுசர், சட்டையுடன் தலைகுப்புற வாலிபர் கிடந்த வாலிபரின் உடலை மீட்ட போலீசார் அவர் கொலை செய்யப்பட்டரா? அல்லது தவறி விழுந்து இறந்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சை கல்லணை கால்வாயில் வாலிபர் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×