search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலில் முக ஸ்டாலின் பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுப்பார்: வைகோ பேட்டி
    X

    பாராளுமன்ற தேர்தலில் முக ஸ்டாலின் பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுப்பார்: வைகோ பேட்டி

    பிரதமரை நிர்ணயிக்கும் சக்தியாக முக ஸ்டாலின் உருவெடுப்பார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். #Vaiko
    சத்திரப்பட்டி:

    திண்டுக்கல் அருகே சத்திரப்பட்டியில் மதிமுக பிரமுகர் இல்ல திருமணவிழா இன்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியும் அனைத்து மக்களுக்கு சொந்தமானது. இன்று பிரதமராக இருக்கும் நரேந்திரமோடி நான் குஜராத்தில் ஒற்றுமை கூட்டத்தில் பேசியபோது எனது பேச்சை குஜராத்தியில் மொழி பெயர்த்தவர். கடந்த 2014-ம் ஆண்டு பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற்று மோடி பிரதமராக பதவியேற்றார். அப்போது இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

    லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேக்கு அழைப்பு விடுத்ததால் மோடிக்கு எதிராக அன்று கருப்புகொடி காட்டினோம். இன்று அவரது ஆட்சி முடியும் சமயத்திலும் மதுரையில் கருப்புக்கொடி காட்ட உள்ளோம்.

    பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் கைப்பற்றும். பிரதமரை நிர்ணயிக்கும் சக்தியாக முக ஸ்டாலின் உருவெடுப்பார். தமிழகத்தில் தேனி மாவட்டத்தை அழிக்க நியூட்ரினோ திட்டமும், டெல்டா மாவட்டத்தின் நீர்ஆதாரத்தை பாதிக்க ஹைட்ரோகார்பன் திட்டங்களையும் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. விரைவில் இது முடிவுக்கு வரும்.

    இவர் அவர் கூறினார்.
    Next Story
    ×