search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் குடியரசு தின விழா கொண்டாட்டம்- ஆளுநர் பன்வாரிலால்  புரோகித் தேசியக்கொடி ஏற்றினார்
    X

    சென்னையில் குடியரசு தின விழா கொண்டாட்டம்- ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசியக்கொடி ஏற்றினார்

    குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற விழாவில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசியக்கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார். #RepublicDay #RepublicDay2019 #TNGovernor
    சென்னை:

    நாட்டின் 70-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. சென்னையில் மெரினா கடற்கரை சாலையில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு, தேசிய கொடியை ஏற்றி வைத்து பல்வேறு படைப்பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார். தேசியக்கொடியை ஏற்றி வைத்தபோது விமானப்படை  ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது.



    விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

    சென்னையில் குடியரசு தினவிழாவையொட்டி மெரினா, காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்ற பகுதிகளில் கடலோர பாதுகாப்புப் படையினரும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

    மக்கள் அதிகம் கூடும் வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான வழிபாட்டுத் தலங்கள், ரெயில் மற்றும் பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #RepublicDay #RepublicDay2019 #TNGovernor

    Next Story
    ×