search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடு- 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது அதிமுக
    X

    பாராளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடு- 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது அதிமுக

    பாராளுமன்றத் தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்காக அதிமுக சார்பில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. #ADMK #EdappadiPalaniswami #OPanneerSelvam
    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.

    இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்குவது உள்பட தங்களை தயார்ப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

    தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் கொண்ட வலுவான கூட்டணி உருவாகி உள்ளது.

    அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அ.தி.மு.க.வும் மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. பா.ஜனதா, பா.ம.க., த.மா.கா., தே.மு.தி.க., புதிய தமிழகம் உள்பட பல கட்சிகள் இந்த கூட்டணியில் சேர வாய்ப்பு உள்ளது.

    இந்த நிலையில் பாராளுமன்றத் தேர்தலுக்கு முழு அளவில் தயாராகும் வகையில் அ.தி.மு.க.வில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தொகுதி பங்கீடு, பிரசாரம், தேர்தல் அறிக்கை ஆகியவற்றுக்காக இந்த குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.


    இது தொடர்பாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, கழகத்தின் சார்பில் பின்வருமாறு குழுக்கள் அமைக்கப்படுகிறது.

    1. கே.பி. முனுசாமி- துணை ஒருங்கிணைப்பாளர்

    2. ஆர். வைத்திலிங்கம்- துணை ஒருங்கிணைப்பாளர், அமைப்புச் செயலாளர் தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்.

    3. அமைச்சர் பி. தங்கமணி- கழக அமைப்புச் செயலாளர், நாமக்கல் மாவட்ட செயலாளர்.

    4. அமைச்சர் எஸ்.பி. வேலுமணி- அமைப்புச் செயலாளர், கோவை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்.

    5. ஜே.சி.டி. பிரபாகர் கழக அமைப்புச் செயலாளர், கழக செய்தித் தொடர்பாளர்.

    அ.தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கையினை தயார் செய்வதற்காக பின் வருமாறு குழு அமைக்கப்படுகிறது.

    1.சி.பொன்னையன்- அமைப்புச் செயலாளர், செய்தித் தொடர்பாளர்.

    2. நத்தம் விசுவநாதன்- அமைப்புச் செயலாளர்

    3. டி.ஜெயக்குமார்- அமைப்புச் செயலாளர், மீன்வளம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர்

    4. சி.வி. சண்முகம்- விழுப்புரம் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர், சட்டம், நீதிமன்றங்கள், சிறைத்துறை மற்றும் கனிமவளத்துறை அமைச்சர்.

    5.செ.செம்மலை எம்.எல்.ஏ.- அமைப்புச் செயலாளர்

    6. பி.எச்.மனோஜ் பாண்டியன் - அமைப்புச் செயலாளர்

    7. ஏ.டபிள்யூ.ரபி பெர்னார்ட் - மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர்.

    அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளவர்களை முறைப்படுத்தி, ஒருங்கிணைத்து, கழகத்தின் சார்பில் பிரசாரப் பணிகளை மேற்கொள்வதற்காக, பின்வருமாறு குழு அமைக்கப்படுகிறது.

    1. டாக்டர் மு. தம்பிதுரை -கொள்கை பரப்புச் செயலாளர், மக்களவை துணை சபாநாயகர்.

    2. திண்டுக்கல் சி. சீனிவாசன்- அமைப்புச் செயலாளர், வனத்துறை அமைச்சர்.

    3. கே.ஏ. செங்கோட்டையன் - அமைப்புச் செயலாளர் பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்.

    4. பா. வளர்மதி - இலக்கிய அணிச் செயலாளர், கழக செய்தித் தொடர்பாளர் தலைவர், தமிழ்நாடு பாடநூல் நிறுவனம்.

    5. எஸ்.கோகுல இந்திரா- அமைப்புச் செயலாளர், கழக செய்தித் தொடர்பாளர்.

    6. டாக்டர் பி. வேணுகோபால் எம்.பி.- மருத்துவ அணிச் செயலாளர் கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் .

    7. டாக்டர் வைகைச் செல்வன் - கொள்கை பரப்பு துணைச் செயலாளர் கழக செய்தித் தொடர்பாளர்.

    இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளனர். #ADMK #EdappadiPalaniswami #OPanneerSelvam
    Next Story
    ×