search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூர் அருகே பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
    X

    பெரம்பலூர் அருகே பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்

    பெரம்பலூர் அருகே தேவேந்திர குல வேளாளர் இன மக்கள் தங்களை எஸ்.சி. பட்டியலில் இருந்து விலக்கு அளித்து தனி பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே செஞ்சேரி கிராமத்தை சேர்ந்த தேவேந்திர குல வேளாளர் இன மக்கள் தங்களை எஸ்.சி. பட்டியலில் இருந்து  விலக்கு அளித்து தனி பட்டியலில் சேர்க்க வலியுறுத்தியும், தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிட வலியுறுத்தியும்  காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    பெரம்பலூர் மாவட்டத் தில் 24 கிராமங்களில் வாழும் பள்ளர், குடும்பர், தேவேந்திர குலத்தார், பண்ணாடி, கடையர், காலாடி மற்றும் வாதிரியார் உள்ளிட்ட பெயர்களில் அழைக்கப்படும் ஏழு சாதிகளையும் ஒரே இனமாக தேவேந்திரகுல வேளாளர் என மாற்றி அரசாணை வழங்க வேண்டும், மேலும் எஸ்.சி., பட்டியலில் இருந்து தேவேந்திரகுல வேளாளர் இனத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என அச்சமுதாய  மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் பெரம்பலூர் ஒன்றியம், ஆலம்பாடி ஊராட்சிக்குட்பட்ட செஞ்சேரி கிராமத்தில்  முன்னாள் ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் தேவேந்திர குல வேளாளர் இன மக்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.எல்.ஏ., பிச்சைமுத்து கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினர். இந்த போராட்டத்தில் 100க்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×