search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.3 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்
    X

    கரூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.3 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்

    கரூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.3 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
    கரூர்:

    கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, காதப்பாறை, மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி, கோயம்பள்ளி, சேமூர், வாங்கல் குப்புச்சிபாளையம், மண்மங்கலம், நெரூர் தெற்கு மற்றும் வடக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் சாலை மேம்பாடு செய்தல், சாக்கடை வசதி செய்தல், கூட்டு குடிநீர் திட்ட பணிகள் என ரூ.2 கோடியே 56 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு பணிகளை பூமிபூஜையிட்டு தொடங்கி வைத்தார்.

    பின்னர் மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி அரசு காலணி-சோமூர் கல்லூப்பாளையம்- அச்சமாபுரம் ஆகிய பகுதிகளில் ரூ.36 லட்சத்து 55 லட்சம் மதிப்பில் முடிவுற்ற 3 சமுதாய கூடங்களையும், கோயம்பள்ளியில் தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகத்தையும் திறந்து வைத்தல் என மொத்தம் ரூ.2 கோடியே 93 லட்சம் மதிப்பிலான புதிய திட்டப்பணிகளை பூமிபூஜையிட்டு தொடங்கி வைத்தும், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார்.

    தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டிளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதகிளில் இன்று 13 இடங்களில் ரூ.2 கோடியே 93 லட்சம் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. மேலப்பாளையம் புலியூர் இடையே அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் உயர்மட்டப்பாலத்தின் அணுகு சாலையை கரூரை சுற்றி அமையவுள்ள சுற்றுவட்டச்சாலையுடன் இணைத்து சாலை வசதி மேம்படுத்தப்படும். கோயம்பள்ளி, செல்லிபாளையம் ஊராட்சிகளில் ரூ.34 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் மதிப்பீட்டில் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக கோயம்பள்ளி மற்றும் செல்லிபாளையத்தில் ஆதார் எண் பதிய தவறியதால் அரிசி பெற இயலவில்லை என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையினை ஏற்று கோயம்பள்ளி மற்றும் செல்லிபாளையம் ஊராட்சியில் ஆதார் எண் பதியாமல் விடுபட்டுள்ள நபர்களின் குடும்ப அட்டைகளை உரிய முறையில் பதிவு செய்திட சிறப்பு முகாமினை நடத்த அமைச்சர் உத்தரவிட்டார்.

    இதில் மாவட்ட ஊரகவளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் கவிதா, வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் இளங்கோ, கரூர் வட்டார வளர்ச்சி அதிகாரி பரமேஸ்வரன், மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் காளியப்பன், கரூர் ஒன்றிய செயலாளர் என்ஜினீயர் கமலக்கண்ணன், மாவட்ட துணை செயலாளர் சிவசாமி, முன்னாள் மாணவரணி தலைவர் என். தானேஷ், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    Next Story
    ×