search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்-அமைச்சர் வீட்டில் குண்டு வெடிக்கும்: போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் விடுத்த சென்னை வாலிபர் கைது
    X

    முதல்-அமைச்சர் வீட்டில் குண்டு வெடிக்கும்: போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் விடுத்த சென்னை வாலிபர் கைது

    முதல்-அமைச்சர் வீட்டில் குண்டு வெடிக்கும் என போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் மூலம் மிரட்டல் விடுத்த சென்னை வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    சென்னை:

    சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு மர்ம போன் வந்தது. அதில் பேசிய வாலிபர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் குண்டு வெடிக்கும் என்று கூறிவிட்டு போனை துண்டித்து விட்டார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் மிரட்டல் போன் வந்த நம்பரை வைத்து துப்பு துலக்கினர். அப்போது செல்போனில் இருந்து அழைப்பு வந்தது தெரியவந்தது. இதையடுத்து செல்போன் நம்பரை வைத்து விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில் மிரட்டல் விடுத்தது கானாத்தூர் பகுதியை சேர்ந்த சிக்கந்தர் பாஷா என்பது தெரியவந்தது. இதையடுத்து கானாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி விசாரணை நடத்தினார். இதனைத் தொடர்ந்து சிக்கந்தர் பாஷா கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சிக்கந்தர் பாஷா நேற்று வாகன சோதனையில் போலீசில் சிக்கினார். அப்போது அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. இதனால் போக்குவரத்து போலீசார் அவரது மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். இதனால் ஏற்பட்ட ஆத்திரம் காரணமாகவே அவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக போலீசார் தெரிவித்தனர். கைதான சிக்கந்தர் பாஷா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளார்.
    Next Story
    ×