search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சமரச மையம் மூலம் கணவரை இழந்த பெண்ணுக்கு 10 பவுன் நகை, ரூ.15½ லட்சம் இழப்பீடு
    X

    சமரச மையம் மூலம் கணவரை இழந்த பெண்ணுக்கு 10 பவுன் நகை, ரூ.15½ லட்சம் இழப்பீடு

    பாபநாசம் அருகே சமரச மையம் மூலம் கணவரை இழந்த பெண்ணுக்கு 10 பவுன் நகை மற்றும் ரூ.15½ லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.
    பாபநாசம்:

    பாபநாசம் அருகே சரபோஜி ராஜபுரம் கிராமத்தில் வசித்து வந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு கோகுல் என்ற மகன் உள்ளார்.

    கிருஷ்ணசாமி உடல் நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். கணவரை இழந்த செல்வி மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் வாழ்ந்து வந்தார். பின்னர் செல்வி பாபநாசம் நீதிமன்றத்தில் இயங்கி வருகின்ற சமரச மையத்தில் மனு கொடுத்துள்ளார்.

    இம்மனுவினை விசாரித்த பாபநாசம் வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவரும், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவருமான ராஜசேகர் செல்வியின் மாமியார் கண்ணம்மாளை அழைத்து பேசி விசாரணை மூலம் உடனடி தீர்வு காணப்பட்டு சமரசம் செய்து வைத்தார்.

    இந்நிலையில் கண்ணம்மாளிடம் இருந்து 10 பவுன் நகையும், ரூ.15 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கமும் பெற்று செல்வியிடம் நீதிபதி வழங்கினார். இதில் அரசு வழக்கறிஞர் சரவணன், பாபநாசம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பாஸ்கரன், பாபநாசம் வட்ட, சட்ட பணிகள் குழுவின் தன்னார்வ சட்ட பணியாளர்கள் ராஜேந்திரன், தனசேகரன் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர். #tamilnews
    Next Story
    ×