search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குத்தாலம் அருகே பொங்கல் விளையாட்டு விழாவில் மோதல்-  10 பேர் கும்பல் மீது போலீசார் வழக்குப்பதிவு
    X

    குத்தாலம் அருகே பொங்கல் விளையாட்டு விழாவில் மோதல்- 10 பேர் கும்பல் மீது போலீசார் வழக்குப்பதிவு

    குத்தாலம் அருகே காணும் பொங்கலையொட்டி விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் ஏற்பட்ட மோதலில் 10 பேர் கும்பல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தரங்கம்பாடி:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே குத்தாலம் தாலுகா அனந்த நல்லூர் கிராமம் பிள்ளையார் கோவில தெருவை சேர்ந்தவர் அறிவழகன் (வயது43). இவர் காணும் பொங்கலையொட்டி அதே தெருவில் அம்பேத்கார் இளைஞரணி சார்பில் விளையாட்டுப் போட்டிகளை நடத்தினார்.

    அப்போது பக்கத்து ஊரை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் அங்கு வந்து மைக்கில் தேவையில்லாமல் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை அறிவழகன் தட்டிக் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் வீட்டிற்கு சென்ற செந்தில்குமார் இதுபற்றி கூறி தனது மகன் சரவணன், தனது தம்பி பெரியதுரை, அவரது மகன்கள் யோகி, சின்னத்தம்பி, சரவணன் மற்றும் 10 பேர் கும்பலுடன் அறிவழகன் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    அங்கிருந்த அறிவழன், அவரது மனைவி திலகவதி, தாயார் சமுத்திரம் ஆகியோரை அவர்கள் கடுமையாக தாக்கி உள்ளனர். மேலும் அவர்களது கூரை வீட்டையும் தீ வைத்து எரிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் திரண்டு வந்ததால் செந்தில்குமார் தனது கும்பலுடன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். தாக்குதலில் காயமடைந்த 3 பேரையும் அப்பகுதி மக்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பாலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இருதரப்பினரிடையே அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளதுரை தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×